கொரோனா வைரஸால் ஏற்படும் நிமோனியாவை கட்டுப்படுத்த இலங்கையின் ‘ பிளக் டீ’ சிறந்த மருந்தாகுமாம் – அரசாங்கம் அறிவிப்பு

இலங்கையின் ‘ பிளக் டீ’ நிமோனியா நோயினை கட்டுப்படுத்த உதவுவதாகவும், அதிக மருத்துவ குணம் கொண்டதாகவும் மருத்துவத்துறையினர் கூறுகின்ற காரணத்தினால் இலங்கையின் தேயிலை சர்வதேச சந்தையில் கேள்வியை எழுப்பியுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.
அரச தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரொமேஷ் பத்திரன இதனை தெரித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
” நாட்டின் நெருக்கடியான நிலைமையிலும் பொருளாதாரத்தை பலப்படுத்த வேண்டும் என்பதற்கான அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது. முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக் ஷ தலைமையிலான பொருளாதார குழு பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றது. பிரதான ஏற்றுமதியான தேயிலை, இறப்பர் என்பவற்றை பலப்படுத்தும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கப்படுகின்றது. அதேபோல் தேசிய விவசாயத்தை பலப்படுத்த இப்போதே பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். தொழிற்சாலைகளை மீண்டும் இயக்கவும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கப்படுகின்றது.
தற்போதுள்ள சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு தமது தொழில் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். அதேபோல் இணைய வழிமுறைகளிலும் வியாபாரங்களை முன்னெடுக்க முடியும். இலங்கை தேயிலை சபை இப்போதே அதற்கான வேலைத்திட்டங்களை உருவாக்கிக் கொடுத்துள்ளது. அதேபோல் இறப்பர் உற்பத்தி பொருட்களுக்கும் இன்று தேவை ஏற்பட்டுள்ளது. கையுறைகள் அதிக கேள்வியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச நாடுகள் எம்மிடம் இருந்து கையுறைகளை கேட்டுள்ளனர். எனவே எமது இறப்பர் தொழில் துறையை பலப்படுத்த இது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. அதனை நாம் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
அதேபோல், எமது தேயிலைக்கான கேள்வியும் ஏற்பட்டுள்ளது. இலங்கையின் ‘ பிளக் டீ’ நல்லதொரு மருத்துவ குணம் கொண்டதாக கருதப்படுகின்றது. சுகாதார பானமாகவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. நிமோனியா போன்ற நோய்களை தடுக்கவும் இலங்கை தேயுளை பயனுள்ளதாக இருப்பதாக சுகாதார துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். எனவே இது எமக்கான உற்பத்தியை ஏற்படுத்திக்கொள்ள நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. ” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.