நெதர்லாந்தில் பயணிகளை நெருக்கமாக ஏற்றிச் சென்ற பஸ் மீது 12000 யூரோதண்டம் விதிக்கப் பட்டது!
நெதர்லாந்தில் நேற்று (07) பயணிகளை நெருக்கமாக ஏற்றிச் சென்ற பஸ் மீது 12000 யூரோ தண்டம் விதிக்கப் பட்டது.
ஏனென்றால் பயணிகளுக்கு இடையில் 1.5 மீட்டர் இடைவெளி இருக்கவில்லை. அதனால் டிரைவர் உட்பட ஒவ்வொரு பயணிக்கும் 399 யூரோபடி தண்டம் விதிக்கப்பட்டது. அது ஒரு தொழில் முகவர் நிறுவனத்தால் வேலையாட்களை தொழிற்சாலைக்கு அழைத்துச் செல்லும் பேருந்து வண்டி. ஆகவே சம்பந்தப் பட்ட நிறுவனம் தண்டப் பணம் கட்டுவதாக பொறுப்பேற்றுள்ளது.