இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்று தணிந்து வருகிறது!
இத்தாலியில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று தணிந்து வருகிறது. ஆனால் அங்கே சமூகப் பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. உணவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சிறு வணிகர்களின் பொருளாதார செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.
உள்ளூர் தொழிலதிபர்கள் அனைத்தையும் இழந்து இயங்க முடியாத நிலையில் உள்ளனர். இந்த சந்தர்ப்பத்தை மாபியாக்கள் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்புள்ளது.
மக்களின் கையில் உள்ள பணம் குறைந்து கொண்டிருக்கிறது. வறுமை அதிகரிக்கிறது. அதனால் மக்களின் வாங்கும் திறன் குறைகிறது. பல இடங்களில் சூப்பர் மார்க்கெட்டுகள் சூறையாடப் பட்டுள்ளன. ஆங்காங்கே புரட்சிக்கான அறைகூவல்கள் கேட்கின்றன.
கலையரசன்