கொரோனா தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டில் உள்ள இலங்கையர் குறித்து குறித்து தினேஷ் குணவர்தனவுக்கு சுனில் ஹந்துன்நெத்தி தகவல் அளித்தார்

கொரோனா வைரஸ் (கோவிட் -19) தொற்றுநோயால் இலங்கை வெளிநாட்டினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து தெரிவிக்க முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வெளிவிவகார அமைச்சருமான தினேஷ் குணவர்தனவுக்கு மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பா.உ சுனில் ஹந்துன்நெத்தி கடிதம் எழுதியுள்ளார்.

அதில் பிரதானமாகக் குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து விடையங்கள் கீழே,

  1. வெளிநாட்டில் வேலை செய்யும் ஒருவர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்திருந்தால் அந்த குடும்பங்களின் உறுப்பினர்களைப் பற்றி அறிந்துகொண்டு அவர்களின் மனநிலையை மேம்படுத்த விரைவான திட்டத்தை உருவாக்குங்கள்.

  2. விசா காலம் காலாவதியாகியதால், விமான போக்குவரத்து தடைசெய்யப்பட்டதால் இலங்கைக்கு வர முடியாத நபர்கள் பற்றிய சட்டப்பூர்வ உண்மையை அறிந்து  தூதரகங்கள் மூலம் தேவையானவற்றை செயற்பாடுகளை  மேற்கொள்ளுங்கள்.

  3. சுற்றுலா மற்றும் வணிக நடவடிக்கைகளுக்காக சென்று மீண்டும் இலங்கைக்குத் திரும்பமுடியாத நபர்கள் பற்றிய  கணக்கெடுப்பைப் பெறுவதோடு அவர்களுக்கு நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்தல்.

  4. தனிமைப்படுத்தலை முடித்துவிட்டு வீட்டிற்குச் செல்வோருக்கு சமாந்தரமாக வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வர எதிர்பார்ப்போடு இருக்கும் நபர்களுக்கு,  பொருத்தமான முன்னுரிமை அடிப்படையில் தனிமைப்படுத்தலின் கீழ் அவர்களை கொண்டுவர வேலைத்திட்டத்தை தயாரித்தல்.

  5. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வழங்கும் காப்பீட்டு ஊழியர்களுக்கு இந்த நேரத்தில் கிடைக்கும் நிவாரணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.

முக்கிய ஐந்து விடயங்கள் பற்றி குறிப்பிட்டு எழுதப்பட்டு, சுனில் ஹந்துன்நெத்தியால் கையொப்பமிடப்பட்ட கடிதமும் கீழே தரப்பட்டுள்ளது.

 

 

 

Leave A Reply

Your email address will not be published.