வட மாகாண ஆசிரியர்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவிக்கும் மகிழ்ச்சியான ஒரு செய்தி
மக்கள் வங்கியில் (People’s bank) இல் 10 இலட்சத்தினை விட அதிகமாக கடன் பெற்ற ஆசிரியர்கள் உங்கள் வங்கி முகாமையாளருக்கு உங்களுடைய சம்பளம் முழுவதையும் வைப்பில் இடும் படியும் மாதாந்த கடன் அறவீடுகளை சம்பளத்திலிருந்து மீளப்பெற வேண்டாம் எனவும் கடிதம் ஒன்றை கொடுத்து முழு பணத்தையும் பெற முடியும்.
வடமாகாணம் முழுவதிலும் உள்ள கிளைகள் இக்கருத்தில் தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளன. தற்போது உலகத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையின் பொருட்டு அநேக ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் (CTSU ) மேற்கொண்ட முயற்சியின் அறுவடை இது.
தகவல் : வவுனியா மாவட்ட ஆசிரியர் பிரதிநிதி S.சிவகாரன்