மனநலம் குன்றிய சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததற்காக தனமன்வில பிரதேச சபை உறுப்பினர் உட்பட ஆறு பேர் ரிமாண்ட் செய்யப்பட்டனர்!

செவனகல,  கிரிஇப்பன்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயது மனநலம் குன்றிய சிறுமியை மோசமான துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்ற குற்றச்சாட்டின் பேரில், தனமல்வில பிரதேச சபையின் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் நாலக ரணவீர கமஆராச்சி உள்ளிட்ட ஆறு சந்தேகநபர்கள் இந்த மாதம் 16 ஆம் தேதி வரை ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் நேற்று (09) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மூன்று மாதங்களுக்கு முன்பு பல சந்தர்ப்பங்களில் சிறுமியை துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கினர் என்று பிரதேச மக்களும் தெரிவித்துள்ளனர்.

ரிமாண்ட் செய்யப்பட்டவர்களில் சிறுமியின் உறவினர் ஒருவர் உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.