கொரோனா தடுப்பு திட்டத்தில் அனைவரும் பங்கேற்கக்கூடிய பொதுவான பொறிமுறையை நிறுவுங்கள் – புதிய சிறகுகள் அமைப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை

கொரோனா தடுப்பு திட்டத்தில் அனைவரும் பங்கேற்கக்கூடிய பொதுவான பொறிமுறையை நிறுவுங்கள் என்று புதிய சிறகுகள் அமைப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் நிலவும் சூழலில் புதிய சிறகுகள் அமைப்பின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதாபினாமிக்க வேலைத்திட்டங்கள் குறித்தும், நாடு முழுவதும் எழுந்துள்ள பிரச்சனைகள் குறித்தும் தெரிவிப்பதற்கு நேற்று (09) பத்தரமுள்ள, அவகாச நிலையத்தில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த ஊடக சந்திரிப்பிலேயே மேற்கண்டவாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆரம்பத்தில் கருத்து தெரிவித்த அவ்வமைப்பின் அங்கத்தவர் எரங்க குணசேகர, கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதில் முன்னணியில் இருக்கும் மருத்துவத்துறை பாதுகாப்பு அதிகாரிகள், பொது சுகாதார ஆய்வாளர்கள், வைத்திய நிபுணர்கள் உட்பட சுகாதாரப் பாதுகாப்புத் துறையில் உள்ள அனைத்து நிபுணர்களுக்கும் அவர் தனது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

அவர் மேலும்,

“மார்ச் 19 முதல் இன்றுவரை  கொரோனாவை தடுக்கும் நோக்கில் புதிய சிறகுகள்  அமைப்பு தொடர்ந்து முயற்சிசெய்து கொண்டு வருகிறது. 19 ஆம் திகதி ராகமா மருத்துவமனையின் இயக்குநருடன் நாங்கள் நடத்திய கலந்துரையாடலின் விளைவாக, சுகாதாரத் துறை ஊழியர்களைப் பாதுகாக்க PPE  அல்லது பாதுகாப்பு ஆடைகளை வழங்குவதற்கான வேலைகளை ஆரம்பித்தோம். நாடு முழுவதும் 70 க்கும் மேற்பட்ட பெரிய மருத்துவமனைகள், பிராந்திய மருத்துவமனைகள், பொது சுகாதார ஆய்வாளர்கள் அலுவலகங்கள் மற்றும் காவல் நிலையங்களுக்கு பாதுகாப்பு ஆடைகளை வழங்கியுள்ளோம். எங்களுக்கு நிதி உதவி செய்த அனைத்து அன்பான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சகோதர, சகோதரிகளுக்கும் எமது நன்றி.

எங்களுக்கு வந்த தொலைபேசி அழைப்புகள், எங்கள் மாவட்ட பிரதிநிதிகள் பெற்ற தகவல்கள் மற்றும் மருத்துவமனைகள், பொது சுகாதார ஆய்வாளர்கள் தெரிவித்த கருத்துகள் போன்றவற்றில் இருந்துகாசில பிரச்சினைகளையும் நாங்கள் அடையாளம் கண்டுகொண்டோம். இந்த பிரச்சினைகளை ஒரு அமைப்பாக தீர்க்க முயற்சிப்பதற்கு பதிலாக அனைவருக்கும் தெளிவுப்படுத்துதல் மற்றும்  பயனுள்ள தலையீட்டின் அவசியத்தையும் அடிப்படையாகக் கொண்டே இவ்விடயத்தை முன்வைக்கிறேன்.

இந்த நிலைமையை ஒரு நபர் அல்லது ஒரு அமைப்பு அல்லது ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே இணைந்து தோற்கடிக்க முடியாது. ஒரு பொதுவான பொறிமுறையில் அனைத்து மக்களும் ஒன்று சேர வேண்டிய நிலையில் இன்று இருக்கிறோம். அரசியல் நோக்கங்களுக்காக செயற்படுவதற்கு பதிலாக, இந்த தொற்றுநோயைத் தோற்கடிக்க அனைத்து மக்களுக்கும் ஒரு உண்மையான பொதுவான பொறிமுறையை உருவாக்குவது அவசியம் என்று நாங்கள் கூறுகிறோம்.

கொரோனா நோயாளிகள்  பற்றி சில ஊடகங்கள் ஊடகங்களில் தேவையற்ற பயத்தை சமூகத்தில் உருவாக்குகிறது. அவர்களை பயங்கரவாதிகளாகப் பார்க்காது அவரையும் அவரது குடும்பத்தினரையும் சங்கடப்படுத்தாதது நடந்துகொள்வது மிகவும் முக்கியமாகும்.

இதன்போது, சில அரசியல்வாதிகளும் ஊடக நிறுவனங்களும் இனவெறியை உருவாக்கும் பிற்போக்குத்தனமான நடவடிக்கையை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தனிமைப்படுத்தப்பட்ட மத்தியநிலையங்கள் தவிர்ந்த, அந்த வலையத்தில் மக்கள் உணவு மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு பணம் இல்லாததால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்காக முறையான பொறிமுறையை அமைக்குமாறு நாங்கள் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம்.

மீனவர்கள் மற்றும் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் மத்தியஸ்தம் செய்யுமாறும், அவர்களுக்கு நீதி வழங்குமாறும் நாங்கள் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம்.

இந்த நேரத்தில் கடுமையான நெருக்கடியில் இருக்கும் மக்களுக்கு, குறிப்பாக சிறிய தனியார் வகுப்புகள் செய்கிற ஆசிரியர்கள், இணையம் மற்றும் அச்சு ஊடகங்களில் பணிபுரிபவர்களுக்கும் நிவாரணம் வழங்குவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

இது அரசாங்கத்தின் மீதான விமர்சனமல்ல. கொரோனாவை அழிப்பதற்கு பயனுள்ள தலையீடு அவசியம் என்றே நாங்கள் குறிப்பிடுகிறோம்.

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் பொது பொறிமுறைக்குள் வேண்டிய வேலைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க நாங்கள் உட்பட பல சிவில் அமைப்புகள் தயாராக உள்ளன என்ற செய்தியையும் கூறி, புதிய சிறகுகளுடன் எங்கள் பணியைத் தொடர்கிறோம் எஎன்பதையும் கூற விரும்புகிறோம். ” என்று தெரிவித்தார்.

இந்த ஊடக சந்திப்பில், புதிய சிறகுகள் அமைப்பின் உறுப்பினர்களான ஊடகவியலாளர் சதுர திசாநாயக்க, சமூக ஆர்வலர் நிர்ஷன் இப்ராஹிம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.