“பணக்கார” மேலைத்தேய அரசுகளின் பிச்சைக்காரத்தனம்: குப்பை வீசும் பொலித்தின் பைகளை போர்த்திக் கொண்டு வேலை செய்யும் மருத்துவ தாதிமார்!

கலையரசன் ( நெதர்லாந்து )

“உலக வல்லரசுகளான” பிரான்ஸிலும், பிரிட்டனிலும் கொரோனா வைரஸ் நோயாளிகளை பராமரிக்கும் தாதிமார் உடலை மூடி அணியும் PPE (Personal Protective Equipment) க்கு பற்றாக்குறை நிலவுகிறது. அதனால் அவர்கள் பாதுகாப்பற்ற குப்பை வீசும் பொலித்தின் பைகளை அணிந்து கொண்டு வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம். ஏற்கனவே தாதிமார் இது குறித்து பல தடவைகள் அரசிடம் முறைப்பாடு செய்து விட்டனர்.

“மருத்துவ தாதியர் ஹீரோக்கள்” என்று அவர்களுக்காக கைதட்ட சொன்ன போக்கிரி முதலாளித்துவ அரசுகள், அவர்களது பாதுகாப்பு குறித்து எந்த அக்கறையும் எடுக்கவில்லை. ஏற்கனவே அரச செலவினக் குறைப்பு என்ற பெயரில் மருத்துவத் துறைக்கு குறைந்தளவு நிதி ஒதுக்கப் பட்டதன் விளைவு இது. தற்போது பிரிட்டனில் சாதாரண போலித்தீன் அணிந்து வேலை செய்த தாதியரில் அரைவாசிப் பேருக்கு கொரோனா நோய் தொற்றி இருப்பது கண்டறியப் பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.