முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டது!

கொரோனா (கோவிட் -19) வைரஸ் பரவாமல் தடுக்க தெருக்களில் பயணிக்கும்போது முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

போலீஸ் ஊடக பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன ஊடகங்களுக்கு அளித்த அறிக்கையில், வீதிகளில்  இருக்கும்போது முகக்கவசம் அணிவது கட்டாயமாகும் என்றும், இது குறித்து போலீசார் ஆராய்வார்கள் என்றும் தெரிவித்தார்.

இது தொடர்பான ஆலோசனை சுற்றுநிருபம் போலீஸ் மத்திய நிலையத்தினால் நாட்டின் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேநேரம், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அனில் ஜசிங்க அவர்கள் முகக்கவசம்  அணிய வேண்டிய அவசியமில்லை என்று  தொடர்ந்து  தெரிவித்திருந்தார்.

வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அருகில் இருப்பவர்கள் தவிர ஏனையோர் இந்த முகக்கவசத்தை அணிய வேண்டிய அவசியமில்லை என்று அவர் தெரிவித்தார்.

 

Leave A Reply

Your email address will not be published.