உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து மரக்கறிகளை இன்று முதல் அரசாங்கம் கொள்வனவு செய்யும்!

அனைத்து மரக்கறிகளை உள்ளூர் விவசாயிகளிடமிருந்து இன்று  (11) முதல் கொள்வனவு செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வேலையாகியுள்ளது.

தம்புள்ள, கலேவெல, நாவுல, லக்கல மற்றும் வில்கமுவ பகுதிகளில் இருந்தே இன்றைய தினம் மரக்கறிகளை கொள்வனவு செய்ய அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாக நேற்றைய தினம் செய்தி வெளியாகியிருந்தது.

இப்பிரதேசங்களில் இருந்து அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட இடங்களில் இருந்தே மரக்கறிகள் கொள்வனவு செய்யப்படுகின்றன.

இருப்பினும், நுவரெலியா, கண்டி,யாழ்ப்பாணம், அம்பாறை, ஹம்பாந்தோட்ட, புத்தளம் மற்றும் மொனராகலை மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் மரக்கறிகளை வாங்குவதற்கான இடம் குறித்து அவர்களுக்கு அறிவிக்கப்படவில்லை.

Leave A Reply

Your email address will not be published.