கொரோனா தொற்றுநோயை அரசியலாக்க வேண்டாம்

கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த உலகின் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும்,தொற்றுநோயை அரசியலாக்க வேண்டாம் என்றும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் உலக சுகாதார அமைப்பை விமர்சித்த கருத்துக்களை நிராகரித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

“தயவுசெய்து தேசிய ரீதியாக அனைவரும் ஒன்றுபடுங்கள். இதனை அரசியல் மயமாக்க வேண்டாம். அதேவேளை, சர்வதேச ரீதியாக  நேர்மையாக இருங்கள். இந்த நேரத்தில் அமெரிக்கா மற்றும் சீனாவிடமிருந்து எங்களுக்கு நேரடி தலைமை தேவை. மேலும் சக்திவாய்ந்த நாடுகள் வழிநடத்தப்பட வேண்டும். தயவுசெய்து கோவிட் அரசியலை தனிமைப்படுத்தி வைக்கவும்.

உலக சுகாதார அமைப்பு சீனாவிற்கு பக்கச்சார்பாக செயற்படுகிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். உலக சுகாதார அமைப்புக்கு ஒதுக்கப்பட்ட நிதி இடைநிறுத்தப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார்.

உலக சுகாதார நிறுவனத்திற்கான மிகப்பெரிய நிதியை வழங்கும் நாடுகளில் அமெரிக்காவும் ஒன்றாகும்.

உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, அமெரிக்கா அதன் ஒட்டுமொத்த பட்ஜெட்டில் 15% பங்களிக்கிறது. உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா தொடர்ந்து நிதியளிக்கும் என்று நம்புகிறோம்.” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.