உலகம் முழுவதும் கொரோனா பலி 1 லட்சத்தைத் தாண்டியுள்ளது!

சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவியுள்ள நிலையில், உலகம் முழுவதும் கொரோனா பலி 1 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

இது வரையில், 1,710,135 பேர் உலகம் முழுவதும் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, 382,041 பேர் குணமடைந்துள்ளனர்.

உலகில் அதிகளவு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில், அமெரிக்க முதலிடத்தில் இருப்பதோடு 503,177 பேர் கொரோனாவைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதோடு இதுவரை 18,761 உயிரிழந்துள்ளனர். உலகிலேயே அதிக உயிரிழப்புகளை இத்தாலி சந்தத்துள்ளது. இதுவரையில் அங்கு 18,849 பேர் கொரோனா தாக்குதலில் பலியாகியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.