நாடு முழுவதும் மருத்துவமனைகளில் இன்சுலின் தட்டுப்பாடு

நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும், நீரிழிவு நோயாளிகளுக்கு இன்றியமையாத மருந்தான இன்சுலின் பற்றாக்குறையால் நீரிழிவு நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அறியமுடிகிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு வழங்கும் 10 மில்லிலிட்டர் இன்சுலின் குப்பிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் மட்டுமல்லாது, தனியார் மருந்தகங்களிலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

வெளியிலிருந்து ஒரு 10 மில்லிலிட்டர் இன்சுலின் குப்பியைப் பெற்றுக்கொள்வதற்கு ரூ .1,200 வரை செலவாகிறது என்றும் பல நோயாளிகளுக்கு இத்தொகையினை செலுத்தி மருந்தைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகவும் அறியமுடிகிறது.

ரூ .685 விலை கொண்ட 3 மில்லிமீட்டர் இன்சுலின் தடுப்பூசி தனியார் மருந்தகங்களில் மட்டுமே விற்கப்படுகிறது.

குருநாகலை போதனா வைத்தியசாலையின் துணை இயக்குநர் மருத்துவர் சந்தன கெந்தன்கமுவவிடம் தொடர்பு கொண்டபோது, ​​இன்சுலின் தடுப்பூசிக்கு சுமார் மூன்று வாரங்களாக தட்டுப்பாடு நிலவிவருவதாக தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.