அரச, தனியார்  ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலைசெய்யும் காலம் ஏப்ரல் 20 வரை நீடிப்பு

“கொவிட் -19” கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் அச்சுறுத்தல் காரணமாக நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அரசமற்றும்  தனியார் ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணிபுரியும் காலத்தை எதிர்வரும் 20ஆம் திகது திங்கட்கிழமை வரையில் நீட்டிக்க அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.

ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இவற்றை தெரிவித்துள்ளனர்.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் அச்சுறுத்தலை அடுத்து நாட்டில் சகல நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. எனினும் பணியாளர்கள் வீடுகளில் இருந்து பணிபுரிய வேண்டும் எனவும்  வீட்டில் இருந்து பணி புரியும் காலமானது விடுமுறை தினம் இல்லை எனவும் அரச மற்றும் தனியார் துறை பிரதானிகளின் அறிவுரைக்கு அமைய முடிந்தளவு வீட்டில் இருந்தவாறு வேலை செய்யுமாறும் அரசாங்கம் அறிவித்திருந்தது.

அதேவேளையில்  சுகாதாரம், வங்கி, போக்குவரத்து மற்றும் அத்தியவசிய சேவைகள் மக்களின் தேவையை கருத்தில் கொண்டு  தமது சேவையை தொடர வேண்டும் எனவும் ஏனைய அனைவரும்  இவ்வாறு வீட்டில் இருந்து பணி புரிய முடியும் எனவும் ஏற்கனவே அரசாங்கம் கூறியிருந்ததுடன் கடந்த 10 ஆம் திகதி வரையில் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த கட்டுப்பாடுகளை எதிர்வரும் 20 ஆம் திகதி திங்கட்கிழமை வரையில் நீட்டிக்க அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.