யாழ் மாவட்டத்தின் சுமார் 250 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கியதன் மூலமாக நாங்கள் நாங்கள் சித்திரைப் புத்தாண்டை கொண்டாடினோம்…… மகிழ்ச்சியாக இருக்கிறது… மக்கள் விடுதலை முன்னணியின் பால் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர்
புத்தாண்டு பிறந்துள்ள இன்று (14) யாழ் மாவட்ட மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட உறுப்பினர்கள் புயல்நேசன், ரொரின்டன், மாஹீர மற்றும் சூரிய சேகரம் ஆகியோர் காலை முதல் மாலை வரையில் வட்டுக்கோட்டை, அராலி, யாழ் சோனகத் தெரு, கொக்குவில், யாழ் நகரவாசிகள், திருநெல்வேலி (பால் பண்ணை),மானிப்பாய், எழுதுமட்டுவாழ், மீசாலை ஆகிய பிரதேசங்களில் கொரோனா கோரப்பிடியில் சிக்கியுள்ள சுமார் 250 (சுமார் 2 இலட்சம் பெறுமதியான) குடும்பங்களுக்கு மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில், உலர் உணவுப்பொதிகளை வழங்கினர்.
இந்த உலர் உணவுப் பொதிகளுக்கான உதவியை கனடா நாட்டு தேசிய புத்திஜீவிகள் அமைப்பு நன்கொடையை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதேபோன்று யாழ் மாவட்ட தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் உறுப்பினர் சூரிய சேகரம் அவர்களின் நன்கொடையானது இந்நிகழ்விற்கு பாரிய உந்துசக்தியாக அமைந்திருந்தது எனபதை குறிப்பிட்டே ஆக வேண்டும் என்று ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.


