முச்சக்கரவண்டி சாரதிகள், பாடசாலை வான் சாரதிகளுக்கும்   5000 ரூபாய் கொடுபனவு வழங்க அரசாங்கம் நடவடிக்கை

முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் பாடசாலை வான் சாரதிகளுக்கும் 5000 ரூபாய் கொடுப்பனவை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் எனினும் அரசாங்க நிவாரண சுட்டரிகையில் இவர்கள் உள்வாங்கப்படவில்லை எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர கூறுகின்றார்.

“கொவிட் -19” கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்களுக்கு நிவாரணங்களை வழங்க அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற வேலைத்திட்டங்களில் அடுத்த கட்டமாக நாளாந்தம் தொழிலில் ஈடுபடும் வேலையாட்கள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அந்த வகையில் முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் பாடசாலை வான் சாரதிகள் தமக்கான நாளாந்த வருமானம் இல்லாது அதிகளவில் சிரமப்படுவதாக கூறிவருகின்ற நிலையில் அவர்களுக்கும் அரசாங்கம் நிவாரணங்களை வழங்க தீர்மானம் எடுத்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார். எனினும் முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் பாடசாலை வான் சாரதிகளுக்கு கொடுப்பனவுகள்  வழங்கும் அரச வேலைத்திட்டம் ஒன்று வரையப்படாத நிலையில் அதற்கான சுட்டரிகைக்கு அப்பால்  மக்களின் நிலைமைகளை கருத்தில் கொண்டு பிரத்தியேக திட்டமாக இதனை செயற்படுத்த தீர்மானித்துள்ளதாகவும், விரைவில் முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் பாடசாலை வான் சாரதிகளுக்கும் 5000 ரூபாய் கொடுப்பனவுகளை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.