ஐயாயிரம் பேருந்துகள், நானூறு புகையிரத சேவைகள் 20 ஆம் திகதி தொடக்கம் பொதுப்போக்குவரத்தில்

நாளை 20 ஆம் திகதி தொடக்கம்  மக்களின் அன்றாட பயணங்களை தடைகளின்றி மேற்கொள்ள ஐயாயிரம் பேருந்துகளையும், நானூறு புகையுரத சேவைகளையும் பொதுப்போக்குவதற்காக பயன்படுத்தவுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.

கொவிட் -19 கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை 20 ஆம் திகதியில் இருந்து பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு சட்டத்தை தளர்க்க அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. அதற்கமைய குறித்த பகுதிகளில் மக்கள் தமக்கான அன்றாட பயணங்களை மேற்கொள்ள பேருந்து மற்றும் புகையிரத சேவைகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய இலங்கை போக்குவரத்து சபையின் ஐயாயிரம் பேருந்துகளையும், நானூறு புகைரத சேவைகளையும் முன்னெடுக்க போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர அரச அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். எனினும் இவ்வாறு பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்படும் சகல பேருந்துகளும், புகையிரதங்களும் சுகாதார அதிகாரிகள் வழங்கும் ஆலோசனைகள் மற்றும் பயணிகளை கொண்டுசெல்லும் போது செய்ய வேண்டிய சுகாதார நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.