A/L மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ பிரதமருக்கு எழுதுகிறார்

A/L மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ பிரதமருக்கு எழுதிய கடிதம்.
Corona தொற்றுக் காரணமாக பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ள உயர் தரம் மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைபரிசில் பிள்ளைகளின் பிரச்சினைகள் தொடர்பாக பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவந்து, அந்த பிள்ளைகள் தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைக்கான முன்மொழிவுகளை மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ பிரதமருக்கு கடிதமூலம் தெரிவித்துள்ளார்.
அக்கடிதத்தில் முழு விபரம் கீழே தரப்படுகிறது.
டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ,
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்,
464/20, பன்னிப்பிட்டிய வீதி,
பெலவத்தை,
பத்தமுல்லை.
கௌரவ பிரதமர் அவர்கள்,
அலரி மாளிகை,
கொழும்பு.
கௌரவ பிரதமர் அவர்களே,

Corona வைரஸ் காரணமாக பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ள உயர் தரம் மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பிள்ளைகளின் பிரச்சினைகள் தொடர்பாக…

தற்போது நமது நாட்டில் தோன்றியுள்ள Corona தொற்றுக் காரணமாக மார்ச் 11ஆம் திகதி முதல் பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டிருப்பதாலும், மார்ச் மாதம் 20ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் காரணமாகவும் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள உயர்தர பரீட்சைக்கும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு முகம் கொடுக்கும் பிள்ளைகள் பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர்.
குறிப்பாக, தற்போது 40 நாட்களுக்கு மேலாக பாடசாலைகள் மூடப்பட்டிருப்பதினாலும், பாடசாலைகளை தொடங்குவதற்காகத் தற்போது அரசாங்கம் முன்மொழிந்திருக்கும் மே 11ஆம் திகதியமனது, தற்போது புதிதாக இனங்காணப்பட்டுவரும் ஊழசழயெ நோயாளிகள் தொகை அதிகரிப்பதன் காரணமாக அந்த முன்மொழிவு நடைமுறைக்கு சாத்தியமற்றதாக இருப்பதால், இந்த ஆகஸ்டில் பரீட்சை எழுதவுள்ள பிள்ளைகளுக்குத் தேவையான கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்க முடியாதிருப்பது உங்களுக்கு தெளிவாகப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
தற்போது கல்வி அதிகாரிகளால் உயர்தர படநெறி மட்டத்தில் ஒரு சில நிவாரணங்களை அளிப்பதாக குறிப்பிட்டுள்ள போதிலும,; அவைகளை சரியாக வரையறுக்கப்படாததினால் தற்போது நடைமுறைப் படுத்தப் படாததினாலும், அந்தந்த பிரச்சினைகள் தொடர்பில் நேரடியாக முகம் கொடுத்திருக்கின்ற மாணவர்களிடமிருந்தும் ஆசிரியர்களிடமிருந்தும் போதுமான கருத்துப் பரிமாற்றம் இடம்பெறாததினால் அந்த நிவாரணங்கள் நடைமுறை சாத்தியமற்றதாக அமைந்துள்ளது.
இம்முறை உயர்தர பரீட்சைக்கு தோன்றியுள்ள மாணவர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை எடுத்துக்கொண்டால்,
01. Corona தொற்றுநோய் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால், உயர்தர பாடத் திட்டங்களை முடிக்க இயலாது போனமை,
02. பல மாணவர்கள் உயர் தரத்திற்காக உயர்தர மேலதிக (தனியார்) வகுப்புகளுக்கு செல்வதற்கு பழக்கப்பட்டிருப்பதால் மேலதிக வகுப்புகள் நடத்த இயலாமை,
03. இம்முறை உயர்தரம் முதற் தடவையாகவும் இரண்டாம் தடவையாகவும் எழுதவுள்ள சகல மாணவர்களும் கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் நிகழ்ந்த ஈஸ்டர் தாக்குதலும், இந்த வருடம் Corona தொற்றுக் காரணமாகவும் கடந்த இரண்டு வருடங்களிலும் பரீட்சை நெருங்கும் மாதங்களில் பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டிருப்பதாலும்,
04. மேல் மாகாணத்தில் தங்கியிருந்து உயர்தரம் கற்கும் மாணவர்கள் தோன்றியுள்ள நிலமைகள் காரணமாக வீடுகளுக்குச் செல்லும்போது தேவையான அனைத்துப் புத்தகங்களையும் கொண்டுச் செல்லாமையால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள்.
05. பாடநெறியை மாற்றிக்கொண்டு ஒரு வருடத்தில் புதிய பாடநெறியை முடிப்பதற்கு முயற்சிக்கின்ற மாணவ மாணவிகளுக்கு தோன்றியுள்ள விஷேடமான நெருக்கடிகள்.
06. உயர்தர பரீட்சைக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ளன. அதனால், அந்த மூன்று மாதத்தில் கைவிடப்பட்ட பாடநெறிகளை எவ்வளவு துரிதமான வேலைத்திட்டத்தினை முன்னெடுத்தாலும அவற்றை முழுமையாக்க முடியாத நிலமை,
07. இன்டாநெட் வழியாக கல்வியை பெற்றுக்கொடுத்தல் அது நடைமுறையில் பெரும்பாலான மாணவர்களுக்கு இயலாமை,
போன்ற பல விடயங்களை குறிப்பிடலாம்.
அதேபோன்று 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு முகம்கொடுக்கவுள்ள மாணவர்களுக்கும் தற்போது நிலவும் நிச்சியமற்றத் தன்மையால் பாரிய அழுத்தங்கள் எதிர்நோக்கப்படுகிறது.
அதனால்,
01. இந்த பிள்ளைகள் முகம் கொடுத்திருக்கின்ற பிரச்சினைகள் தொடர்பில் மக்கள் கருத்துக்களை (Online Public Hearing) இணைய வழியாக கல்வி அமைச்சுக்கு பெற்றுக்கொள்தல் (குறுகிய காலத்தில்)
02. மேற்கூறிய மக்கள் கருத்துக்களையும் கவனத்திலெடுத்து ஆகஸ்ட் மாதத்தில் நடத்தவுள்ள உயர்தரம் மற்றும் ஐந்தாம் ஆண்டு பரீட்சைகள் தொடர்பில் முடிவினை எடுபப்தற்கு புகழ்பெற்ற கல்வியியலாளர்கள், பல்கலைக்கழக ஆசிரியர்கள், சுகாதார வல்லுநர்கள் அடங்கிய குழுவொன்றை அமைத்தல்
03. இந்த நிலமைகளுக்கு முகம்கொடுத்துள்ள ஏனைய நாடுகள் பயன்படுத்துகின்ற மிகவும் வெற்றிகரமான நமது நாட்டிற்கு நடைமுறைச் சாத்தியமான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து கவனத்திலெடுத்தல்.
04. இந்தக் குழு எடுக்கும் முடிவுகளை குறைந்தபட்சம் மே மாதம் மூன்றாம் வாரத்திற்கு முன்னர் நடைமுறை படுத்துதல்
நன்றி!
டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்.
2020.04.24″

Leave A Reply

Your email address will not be published.