நிலமையைக் கருத்திற் கொள்ளாது ஆசிரியர்களின் சம்பளத்தை குறைக்க முடியாது – ஆசிரியர் சேவை சங்கம் கூறுகிறது

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக  ஊரடங்குச் சட்டம் விதிக்கப்பட்டுள்ளபோது, ஆசிரியர்களின் சம்பளத்தை நிறுத்துமாறு உடுகம கல்வி பணிப்பாளர் பிராந்தியத்தில் உள்ள அனைத்து அதிபர்களுக்கும் அனுப்பிய கடிதத்திற்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கடுமையாக ஆட்சேபனை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதால் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டு பாடசாலைகள்  மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர் தகவல் அமைப்பு (SIS ) முழுமையடையாத காரணத்தினால், தெற்கு மாகாண கல்வி செயலாளரின் அறிவுறுத்தலின் பேரில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி 20.04.2020 அன்று உடுகம வலைய கல்வி பணிப்பாளரினால் அனைத்து அதிபர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வாறு சம்பளத்தை தற்காலிகமாக நிறுத்துவதற்கு எந்தவிதமான சட்ட விதிகளும் இல்லை என்று ஆசிரியர் சேவை சங்கம் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

இந்த விஷயத்தை உடனடியாக ஆராய்ந்து பொறுப்பான அதிகாரிகள் எடுக்கும் தன்னிச்சையான நடவடிக்கையை நிறுத்துமாறு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் ஆளுநரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.