ஒரே நாளில் 30,000 பேருக்கு கொரோனா… 2200 பேர் பலி…. அமெரிக்காவில் தொடரும் சோகம்….

33 கோடி மக்கள் தொகை கொண்ட வல்லரசு அந்தஸ்து உடைய மிகப்பெரிய நாடான அமெரிக்கா கொரோனாவின் கோரத்தாண்டவத்திற்கு இரையாகி வருகிறது. தினமும் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அந்நாட்டு மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாத அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் சீனாவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார்.

இந்நிலையில், அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் 30 ஆயிரத்து 829  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை அங்கு மொத்த பாதிப்பு 11 லட்சத்தை நெருங்குகிறது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 201 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 64 ஆயிரத்து 856 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பலத்த சேதாரத்தைச் சந்தித்து வரும் நியூயார்க் மாகாணம் கடுமையாகத் திணறி வருகிறது. அமெரிக்காவின் கொரோனா நிலவரத்தை அதிகமாக்குவதும், குறைப்பதும் நியூயார்க் மாகாணம் தான் நிர்ணயிக்கிறது. அங்கு இதுவரை 3 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 18 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். நியூயார்க் அடுத்து நியூ ஜெர்ஸி உள்ளது. அங்கு இதுவரை 1 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 7 ஆயிரத்து 200 ஆக உள்ளது. இந்த 2 மாகாணங்களில் கொரோனவை கட்டுப்படுத்திவிட்டாலே அமெரிக்காவில் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையை வெகுவாக குறைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

தீக்கதிர் 

Leave A Reply

Your email address will not be published.