அறிவுக்கு உயிர் கொடுத்தோர் அழிவதில்லை

இது 2018 இல் நடந்த சம்பவம். ‘தினமின’ (දිනමිණ) தேசிய நாளிதழ் பத்திரிகை மக்கள் விடுதலை முன்னணி (JVP)யின் தலைவர் அனுர குமார திசாநாயக்கவுக்கு எதிராக அவதூறு செய்தியொன்றைப் பிரசுரித்தது.

இச் செயலை எதிர்த்து நடைபெற்ற வழக்கில், ‘தாம் செய்த தவறுக்காக ம.வி.மு. தலைவரிடம் மன்னிப்பு கோருவதற்கும், அச் செய்தி பொய்யானது என கவலையைத் தெரிவிக்கும் செய்தியொன்றை பிரசுரிப்பதற்கும்’ ‘தினமின’ பத்திரிகை சம்மதம் தெரிவித்தது.

எனவே, ரூபா 50,000/= தண்டப் பணம் பாதிக்கப்பட்ட ம.வி.மு. தலைவருக்கு வழங்குமாறு கூறிய நீதிமன்றம் வழக்கை சமரசம் செய்து தீர்ப்பளித்தது.

அத் தண்டப் பணத்தை மதுகமையில் சனச வங்கிக் கணக்கில் வைப்பு செய்து, மதுகமை போபிட்டிய கணிஷ்ட பாடசாலையின் க.பொ.த. சாதாரன தரம் மாணவர்களின் கல்விப் புலமை நிதியத்திற்கு வழங்குவதென ம.வி.மு. யின் தலைவர் தீர்மானித்தார்.

அதன் பிரகாரம், அதற்கான காசோலையை களுத்துறை மாவட்ட ம.வி.மு. பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ சனச வங்கியில் கையளித்தார்.

* * * * *

ஓர் அரசியல் கட்சி, தேர்தல்களில் வெற்றி பெறலாம் தோல்வியையும் சந்திக்கலாம். அதுவொரு விடயமல்ல.

ஆனால் ஒரு சமூக இயக்கத்தின் வெற்றி – தோல்வியை தேர்தல் முடிவுகளை மட்டும் அளவுகோளாகக் கொண்டு மட்டிட முடியாது; மதிப்பிடவும் கூடாது.

ம.வி.மு. அரசியல் கட்சி என்ற நிலையில் விட்டும் ‘அரசியல் இயக்கம்’ என்ற பரிணாமம் பெற்ற ஒரு சமூக இயக்கம் என்பதனை நிரூபிக்கக் கூடிய பல்வேறு நிகழ்வுகளில் இதுவொரு பதச் சோறு மட்டுமே.

ஹிஷாம் ஹுசைன் – புத்தளம்

Leave A Reply

Your email address will not be published.