கொரோனா அச்சத்தலிருந்து மீளுவதற்குள் மலையக மக்கள் இயற்கை அனர்த்தித்தில் முகம் கொடுத்துள்ளனர்

இரா.யோகேசன் (கினிகத்தேனை நிருபர்)

கொரோனா அச்சத்திலிருந்து மீளுவதற்குள் பெருந்தோட்டத்துறை மக்கள் இயற்கை அனர்த்தத்திற்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என நுவரெலியா மாவட்ட சுயேட்சை வேட்பாளரும் சட்டதரணியுமான அனுஷா சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெவித்துள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மேலும் விலைவாசி உயர்வாக இருந்தாலும் சரி, அத்துடன் மண்சரிவு, வெள்ளம், வறட்சியாக இருந்தாலும் சரி அல்லது உலகையே பயமுறுத்தி அழிக்கும் கொரோனாவாக இருந்தாலும் சரி இதன் முழு பாதிப்புக்களுக்கும் இழப்புகளுக்கும் முகம் கொடுப்பது பெருந்தோட்டத்துறை மக்களே! அதில் எதிர்பார்ப்பது, ஏமாறுவது, போராடுவது பின்னர் கைவிடுவது என்று எல்லா துறைகளிலும் நம்பிக்கை இழந்து வாழ்வதும் எம்மக்களே.

5000 ரூபாய் கொடுப்பனவும் ஒவ்வொரு நாளும் முறைப்பாடுகளை தெரிவித்த மக்கள் இப்போது களைத்து ஓய்ந்துவிட்டார்கள். சம்பள உயர்வுக்காக காத்திருந்த தொழிலாளர்கள் அதற்கான விளக்கங்களை கேட்டு கேட்டு சலித்துவிட்டார்கள். சட்டியிலிருந்து அடுப்பில் விழுந்த கதையாக இப்போது இயற்கையும் எம்மக்களை சோதிக்க ஆரம்பித்துவிட்டது. மண்சரிவு அபாயம் பற்றி வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. ஆனால் இதற்கான முன்னெச்சிரிக்கை நடவடிக்கையாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதனை எவருமே அறிவிக்கவில்லை. அதிக மழையினாலோ அல்லது வெள்ளத்தினாலோ, மண்சரிவினாலோ யாரிடம் முறையிடுவது இதற்கான என்ன நிவாரண ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன என்பது பற்றி மக்கள் தெளிவு படுத்தப்பட வேண்டும்.

அவ்வாறு அனர்த்தங்கள் ஏற்பட்டதன் பின்னர் ஒரு சில நிவாரணப் பொருட்களுடன் நாம் இவர்களை சந்தித்து அறிக்கை விடுவதை விடவும் இவ்வாறான அனர்த்தங்களிலிருந்து அவர்கள் தங்களை நிரந்தரமாகக் காத்துக் கொள்ளும் கட்டமைப்பபையே நாம் ஏற்படுத்த வேண்டும்.

இதற்கனான அனர்த்த முகாமைத்துவ அமைப்பு, வானிலை அவதான நிலையம் மற்றும் மாவட்ட பிரதேச செயலாளர்களின் ஆலோசனைகளை நாம் உடனடியாகப் பெற்று எம் மக்களை இதற்கேற்ப அறிவுறுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.