கொரோனாவால் ஏற்படும் கல்வி பிரச்சினைகள் குறித்த மக்கள் விடுதலை முன்னணியின் பரிந்துரைகள்…

கொரோனாவால் ஏற்படும் கல்வி பிரச்சினைகள் குறித்து சில பரிந்துரைகளுடன் ஜே.வி.பி  17.05.2020 செய்தியாளர் சந்திப்பை நடத்தியது.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள ம.வி.மு பிரதான அலுவலகத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்நாயக்க அவர்கள் முகநூல் வாயிலாக நடத்திய செய்தியாளர் மாநாட்டின் முழு விபரங்கள். பின்வருமாறு…

பாடசாலை மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டு இன்றுடன் 68 நாட்கள் ஆகின்றன. படசாலைகளை ஆரப்பிப்தற்கான சூழ்நிலை இன்னமும் ஏற்படவில்லையென கலவி அமைச்சர் தெரிவித்துள்ளார். சுமார் இரண்டரை மாதங்களுக்கு மேலாக பாடசாலைகள் மூடப்பட்டிருப்பதால் உயர்தப் பரீட்சை மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவ மாணவிகளுக்கு பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது. அதேபோன்று சாதாரண தரப் பரீட்சைக்கும் இதன் தாக்கம் ஏற்படவுள்ளது. இது தொடர்பில் எங்கள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ அவர்கள் பிரதமருக்கு எமுத்து மூலமாக தெரிவித்திருந்தார். பிள்ளைகள், பெற்றௌர்கள், மற்றும் ஆசிரியர்கள் உயர்தர மாணவர்கள் மற்றும் உதவித்தொகை தேர்வு தொடர்பாக ஆசிரியர்களிடையே கணிசமான சிக்கலும் நிச்சயமற்ற தன்மையம் தோன்றியுள்ளது.

இதன் விளைவாக, கல்வியாளர்கள், ஆசிரியர்கள் இதேபோன்ற அனுபவம் வாய்ந்த நாடுகளின் நடைமுறைகளைப் படித்தறிவதற்கு பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களைக் கொண்ட ஒரு குழுவை நியமித்து, மே மாதம் தொடக்கத்தில் தங்கள் குழந்தைகளுக்கு தீர்வொன்றை பெற்றுத் தருமாறு கேட்டுக்கொண்டனர். இருப்பினும், நிச்சயமற்ற விடயங்களைத் தவிர, கல்வி அமைச்சு எந்தவொரு உருப்படியான யோசனைளையும் முன்வைக்கவில்லை. இந்த நிச்சயமற்ற தன்மை குழந்தைகளுக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. உயர்தரப் பாடத்திட்டம் இல்லாதது கடுமையான பிரச்சினையாக மாறியிருக்கிறது. நாங்கள் ஒப்புக்கொண்டாலும் இல்லாவிட்டாலும், உயர்தரப் பாடத் திட்டங்களை நிறைவுசெய்வதற்கு தனியார் கல்வி நிலவியதை மறுதளிக்க முடியாது. கணிசமான எண்ணிக்கையிலான மாணவர்கள் பாடங்களை மாற்றி, உயர்தரத்தில் பரீட்சை எழுதவுள்ளனர். பள்ளிகளை திடீரென மூடியதால் குழந்தைகளின் ஸ்தம்பித்துப் போயுள்ளதை யாரும் மறுதளிக்க முடியாது. வடக்கு மற்றும் கிழக்கில் இந்த பிரச்சினை மிகவும் தீவிரமானது. இந்த அனைத்து காரணிகளையும் பரிசீலித்தபின், பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னர் அவர்கள் இழக்கும் நேரத்தை, அவர்களின் கல்வியில் சேர்க்கவும், தேர்வுகளை நடத்தவும் கேட்டுக்கொள்கிறோம்.

கல்வி அமைச்சரே அண்மையில் கூறியிருந்தார். 532 பாடசாலைகளுக்கு தண்ணீர் இல்லை, 800 பாடசாலைகளுக்கு மலசலக் கூடமில்லை. மொத்தப் பாடசாலைகளில் 8% க்கு தண்ணீர் இல்லையென்பது நாட்டின் பௌதீக வளங்களில் உள்ள பாகுபாட்டின் சரியான எடுத்துக்காட்டடாகும். இந்த நிலமையின் கீழ் இணைய வழிக் கல்வியை பெற்றுக்கொடுப்பது எவ்வளவு பயனுள்ளதென பல்கலைக்கழக் ஆசிரியர்கள், பாடசாவை ஆசிரியர்களிடம் தனிப்பட்ட ரீதியில் நான் கேட்டறிந்தேன். கொழும்பு பிராந்தியத்தில் கூட, பிள்ளைகளில் 60 வீதத்தினருக்கே இணைய கல்விக்கான வசதிகள் இருப்பது தெரிய வருகிறது. கற்றலுக்கான தடைகள் போன்ற பல காரணிகளால் இணைய அணுகலுக்கான செலவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. அனுராதபுரம் போன்ற கிராமப் புறங்களில் இணைய அணுகல் மிகக் குறைவு. வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் நகரத்தில் கூட இணைய அணுகல் மிகவும் குறைவாகவே உள்ளது. கிளிநொச்சியின் நிலைமை மிகவும் மோசமானது.
சில மாதங்களுக்குப் பின்னர் பிள்ளைகள் பாடசாலைக்கு வந்ததன் பின்னர் பாடத்திட்டத்தை முழுமையாக்குவது தொடர்பில் பாரிய அழுத்தத்தினை ஆசிரியர்கள் சந்திக்கவுள்ளனர். இணைய வழிக் கற்பித்தல் இலகுவான விடயமல்ல.

நாம் இந்தக் கருத்தினை தெரிவிப்பது இணையக் கல்வியை நிராகரிப்பதற்கல்ல. பாடத்திட்டங்களை முழுமையாக்குவதை நோக்கமாகக் கொண்டு இணையக் கல்வியை கொண்டுச் செல்ல வேண்டாம் என்றே கேட்கின்றோம். மருத்துவ பீடம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் கூட மாணவர்களில் 60% வீதத்தினருக்கே இணைய வசதி இருப்பதாக பல்கலைக்கழக ஆசியரியர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வருவதாக ஆசிரியர்கள் கூறுகிறார்கள். மைக்ரோ சொப்ட் நிறுவனத்தின் ஸ்தாபகரான பில் கேட்ஸ் உலகத்தில் நிலவுகின்ற கல்வி பாகுபாடு இணைய கல்வியால் இருமடங்கு மும்மடங்ககாக மாறாலாமெனத் தெரிவித்திருந்தார். அவர் இதைப்பற்றி இந்தியாவையோ இலங்கையையோ பார்த்துக் கூறவில்லை. ஐக்கிய அமெரிக்க போன்ற நாடுகளைப் பார்த்தே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். அந்த அறிக்கையின் தன்மை என்னவென்று எமக்கு புரிகிறது. போட்டித் தன்மையுடன் கூடிய கல்வியை வழங்கி பாடநெறிகளை பூர்த்திச் செய்துள்ளதாக கல்வி அதிகாரிகள் பெருமையடையக் கூடாது என்றே நாங்கள் கூறுகின்றோம். சில ஆசிரியர்களைப் போன்றே சில பெற்றௌர்களும் இந்த பாரிய சமத்துமின்மையை புரிந்துக் கொள்ளவில்லை என்றே தெரிகிறது.

நமது நாட்டின் 90% சதவீதமான மாணவர்கள் இலவசக் கல்வியையே பெறுகின்றனர். அல்லது அரச கல்வி. ஏனையவர்கள் சர்வதேச பாடசாலைகளில் கல்வி பெறுகின்றனர். தனியார்துறை பிரதானமான சர்வதேச பாடசாலைகளில் கூட ஆசியர்களின் ஏப்ரல் மாத சம்பளம் வழங்கப்படவில்லை. பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் தவணைக் கட்டணத்தை செலுத்தாததினால் பிள்ளைகளை இணைய கல்வியில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. இது ஒரு கவலைக்கிடமான செய்தியாகும். இலவசக் கல்வியை பாதுகாத்தமை, அதற்கான நிதி ஒதுக்குதல், அதை உயிராகக் கருதி பாதுகாத்தமையின் பயன்பாடு எவ்வளவு என்பது இவ்வாறான சந்தர்ப்பத்தில் நன்கு புரிகிறது.

பிள்ளைகளின் கல்விக்கான சுமையை கல்வி அமைச்சுப் பொறுப்பேற்க வேண்டும். தவணைக் கட்டணத்தை செலுத்த முடியாதததினால் கல்வியை பறிக்கப்பட்டிருக்கின்ற சர்வதேச பாடசாலைகள் தொடர்பில் தலையிடுமாறு கல்வி அமைச்சரை நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம்.

தற்போதுள்ள ஒட்டுமொத்த கல்வி பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பில் எம்மிடம் முன்மொழிவுகள் உள்ளன.

■ இணையவழிக் கல்வியை மேலதிக முறையாக மட்டும் கொண்டுச் செல்தல்
■ குழந்தைகள் மீது வரம்பற்ற சுமையை ஏற்படுத்தும் வகையில் ஆன்லைன் கல்வியை பராமரிக்க வேண்டாம்.
■ இணைய சேவைகளுக்கான அறவிடும் கட்டணங்களை குறைத்தல். இது இரவு நேர பகல் நேர கட்டண பாகுபாட்டை இரவு நேரத்தில் வழங்கப்படும் டேடாவை பகல் நேரத்தில் பெற்றுக்கொடுத்தல்.
■ பள்ளிகளைத் திறக்க குறிப்பிட்ட முடிவு இல்லாத சூழ்நிலையில் சாதாரண நிலைக்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு எந்த வகையான கல்வி வழங்கப்பட வேண்டும் என்பது குறித்து முறையான கலந்துரையாடலை நடத்துங்கள்.
■ இணையம் மற்றும் தொலைக்காட்சியைப் பயன்படுத்தி பாடத்திட்டத்திற்கு வெளியே மாற்று கல்வித் திட்டங்களை ஊக்குவித்தல்.
■ பல்கலைக்கழக மாணவர்களுக்கான அடிப்படை திட்டங்களை நாங்கள் முன்மொழிகிறோம் மற்றும் அவர்களுக்கு ஆன்லைன் கல்வியை எளிதாக்க மகாபொல மற்றும் உதவித்தொகை வழங்க வேண்டுமென கேட்கின்றௌம்.

ஜனாதிபதி சமீபத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை வரவழைத்து கல்வி தொடர்பான வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பாக சில வார்த்தைளைக் கூறியாக வேண்டும். கொரோனா தொற்றுநோய்களின் போது தற்காலிக நடவடிக்கைகளாக நாங்கள் ஏற்றுக்கொள்வதை பொதுமைப்படுத்த அனுமதிக்கக்கூடாது. சுகாகதாரம் தொடர்பிலும் அதேதான். கொரோனா நிலைமையின் கீழ் எடுக்கப்படும் நடவடிக்கைகளின் கீழ். அதன் பின்னர் அதுவே கட்டாயமாக்கப்படுவதாக இருக்கக் கூடாது. ஜனாதிபதி அவர்கள் அக் கலந்துரையாடலில் தொழில் சந்தைக்கு பொறுத்தமான விதத்தில் நமது பட்டப்படிப்பு பாடநெறிகளை தயாரிக்க வேண்டுமெனவும் தெரிவித்திருந்தார்.

இது ஒரு பழைய கருத்து. இலங்கையில் தொழில் சந்தையென்பது பொருளாதார வெளிப்படாகும். எமது பொருளாதாரம் வளர்ச்சியடைந்த ஒன்றல்ல. இலங்கையின் பொருளாதாரத்திற்கு பொருத்தமான பாடநெறியை தயாரித்தால் இந்த பாடநெறிகள் பெரும்பாலனவற்றை டிப்ளோமா பாடநெறியாக மாற்றியமைக்க வேண்டிய நிலை ஏற்படும். உதாரணமாக பொறியியல் பாடநெறி தேவைப்படுவது பாரிய கைத்தொழில் ஈடுபடும் நாடுகளுக்கே. ஜனாதிபதி கூறுவது போன்று “பொறியியல் பட்டப்படிப்பை டிப்ளோமா பாடநெறியாக மாற்றியமைத்தாக வேண்டும். இலங்கையில் தொழில் சந்தையில் மிகக் குறைவான கேள்வியே பொறியியல் துறைக்கு இருக்கிறது.” இலங்கையில் உற்பத்தி குறைவதென்பதால், தொழில் துறை பலவீனமானதால், உயர்மட்ட தொழில்களுக்கான கேள்வி குறைவாகக் காணபப்டுவதால், எமது கல்வியை துண்டிப்பதற்கே இந்த முன்மொழிவுகள் உதவுமென்பதை கூறிவைக்கின்றோம்.

எங்கள் உற்பத்தித் துறைகள் உலக வங்கியின் சர்வதேச நாணய நிதியத்தால் வழங்கப்பட்ட நிதி வலையில் சிக்கியுள்ளன. ஆனால் இந்த திட்டங்களால் நமது உயர்கல்வியின் தரம் ஓரளவிற்கு பாதுகாக்கப்பட்டிருப்பது இந்த யோசனையின் மூலமாக அது துண்டிக்கப்படும். நாட்டின் தலைவர்களின் சிந்தனைக்கு ஏற்ப கல்வியை துண்டிக்க வேண்டாமென கல்வியாளர்களிடம் கூற விரும்புகிறோம். மேலும், ஒவ்வொரு வேலைக்கும் தொழில் சந்தை இல்லையென்பதையும் தெரிவிக்கின்றோம். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நம் நாட்டில் ஏராளமான தொல்பொருட்களைப் பாதுகாக்க மிக முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். ஆனால் அதற்கான தொழில் சந்தை நம் நாட்டில் இல்லை. அபோன்று ஏராளமான மனநோயாளிகள் உள்ளனர். எந்த நிறுவனம் உளவியலாளர்களை சேவகளைப் பெற்றுக்கொள்கிறது? நாட்டின் பெருவாரியாக சூழல் சேதமடைந்துள்ளது. சந்தை சூழலியல் நிபுணர்களைக் கோரவில்லை. ஆனால் ஒரு சமூகத்தை பராமரிப்பதற்கும் ஒரு அரசை பராமரிப்பதற்கும் இதுபோன்ற பல வேலைகள் தேவைப்படுகின்றன. இந்த நிலைமை ஜனாதிபதிக்கு புரியவில்லை என்பதில் நான் மிகவும் வருந்துகிறேன்.

Leave A Reply

Your email address will not be published.