மண்சரிவால் பாதிக்கப்பட்ட ஹட்டன் செனன் தோட்ட மக்களை பார்வையிட்டு கலந்துரையாடினார் முன்னாள் மகாண சபை உறுப்பினர் சோ.ஶ்ரீதரன்

இரா.யோகேசன் (கினிகத்தேனை நிருபர்)

ஹட்டன் தோட்ட மண்சரிவில் பாதிக்ப்பட்ட குடும்பங்களை தற்காலிமாக தங்கவைப்பதற்கான கூடாரங்களை அமைப்பதற்கு இடர் முகாமைத்து அமைச்சின் உதவியை பெற்றுத்தருமாறு நுவரெலியா மாவட்ட செயலாளரிடம் தான் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருப்பதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ஹட்டன் செனன் பிரதான பாதையின் ஒரு பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக செனன் தோட்டத்தில் நான்கு வீடுகள் சேதத்திற்கு உள்ளாகியுள்ளன. இந்த மண்சரிவுத் தொடர்ந்து அவ்விடத்திலிருந்து 6 குடும்பங்களை சேர்ந்தவர்கள் இடபெயர்ந்து தற்போது செனன் பாடசாலையில் தங்கவைக்ப்பட்டுள்ளனர்.

இந்த குடும்பங்கள் தற்போது எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் அமைச்சருமான பழனி திகாம்பரம் எனக்கு பணிப்புரை வழங்கினார்.

இதற்கேற்ப பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து அவர்களுடைய பிரச்சினைகள் கேட்டறிந்ததோடு இவ்விடயம் தொடர்பாக கிராம அலுவலர் இதோட்ட முகாமையாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நோர்வூட் பொறியியலாளர், அம்பகமுவ பிரதேச செயலாளர் ஆகியோருடன் தொடர்புகளை மேற்கொண்டேன்.

அத்துடன் நுவரெலியா மாவட்ட செயலாளருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தோட்ட நிர்வாகத்தின் உதவியுடன் தற்காலிக கூடாரங்களை அமைத்து கொடுப்பதற்கு இடர்முகாமைத்து அமைச்சின் ஊடாக கூரைத்தகரங்களைப் பெற்றுத் தருமாறு வேண்டுகோள் விடுத்தேன். அதற்கு அவர் அம்பகமுவ பிரதேச செயலாளருடன் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
மேலும் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் மண்சரிவு அபாயம் நீங்கிய பிறகு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக பாதுகாப்பு மதில் ஒன்றை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நோர்வூட் பிராந்திய பொறியியலாளர் உறுதியும் வழங்கினார்.

இதேவேளை செனன் தோட்டத்தில் மண்சரிவு பாதிக்ப்பட்டு பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஊடாக உலர் உணவுப் பொருட்களை வழங்குவதற்கு முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் பணிப்புரை வழங்கியுள்ளதோடு இதன் போது தொழிலாளர் தேசிய சங்கத்தின் முக்கியஸ்தர்களான விஜேந்திரன், ஜெஸ்டின், ராமசந்திரன் ஆகியோர் கலந்துக்கொண்டிருந்தனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.