எரிபொருள் எண்ணெய் விலையைக் குறைக்குமாறு கோரி பாணந்துரை நகர சபையின் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் முன்வைத்த பிரேரனை ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது

Lanka Indian Oil Company (LIOC) நிறுவனத்தின் தான்தோன்றித் தனமான செயற்பாட்டை தோல்வியடையச் செய்வதற்கும், சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெயின் விலை வீழ்ச்சியின் அனுகூலங்களை மக்களுக்குப் பெற்றுக் கொடுக்கும் நோக்கிலும், எரிபொருள் எண்ணெயின் விலையைக் குறைக்குமாறு பாணந்துரை நகர சபையின் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் (2020.05.21 ஆம் திகதி) முன்வைத்த பிரேரனை சபையோரினால் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.

பாணந்துரை ம.வி.மு. உறுப்பினர்களான பியசேன பிரனாந்து, பந்துல சொய்சா, கயா உதயங்கனீ டி சில்வா, சந்திம ஹெட்டிஆரச்சி ஆகியோர் இம் முனமொழிவை சபையில் சமர்ப்பித்தனர்.

அதற்கமைய, LIOC யின் தான்தோன்றித் தனமான செயற்பாடுகளைத் தோல்வியடையச் செய்வதற்கும் எண்ணெய் விலையைக் குறைப்பதற்கும் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் முன்வைத்த பிரேரனைக்கு சபை உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கியதால் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.