விவசாயிகள் பயிர்ச் செய்கையை ஆரம்பித்து விட்டார்கள் – போதுமான அளவு உரத்தை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு

ஆனால் அரசாங்கம் உரப் பற்றாக்குறைக்கு விவசாயிகளை குறைகூறுகிறது - அகில இலங்கை கமநல சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன

நெல் பயிர்ச் செய்கை மற்றும் மரக்கறி, பழ வகைகளுக்குத் தேவையான உரம் கொள்வனவு செயவதற்காக தம்புள்ளை நகரின் விவசாய விற்பனைச் சேவை நிலையங்களுக்கு வருகின்ற விவசாயிகள் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் (22.05.2020) நின்றிருன்தனர்.

இவ்வாறு பல நாட்களாக வரிசையில் நின்றாலும் போதுமான அளவு உரம் பெற்றுக்கொள்ள முடியாமல் போவதாக விவசாயிகள் குறைப்படுகின்றனர்.

இவ் உரப் பற்றாக்குறை தொடர்பாக அகில இலங்கை கமநல சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன (JVP) தம்புள்ளைப் பிரதேசத்தில் கள விஜயமொன்றை மேற்கொண்டு (22.05.2020) கருத்து தெரிவித்த போது, “விவசாயிகள் பயிர்ச் செய்கையை ஆரம்பித்து விட்டார்கள். போதுமான அளவு உரத்தை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு. ஆனால் அரசாங்கம் உரப் பற்றாக்குறைக்கு விவசாயிகளை குறைகூறுகிறது” எனக் கூறினார். மேலும், “உடனடியாக விவசாயிகளுக்கு உரம் வழங்க ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்” என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

இன்றைய நாட்களில் உள்நாட்டு பெரிய வெங்காயச் செய்கைக்கும் மரக்கறி செய்கைக்கும் நிலத்தைத் தயார்படுத்தினாலும் தேவையான உரம் மிகவும் குறைந்த அளவு கிடைப்பதாகவும் ஒரு விவசாயிக்கு ஒரு மூடை என வரையறுத்து வழங்கப்படுவதாகவும் முறைப்பாடு செய்த விவசாயிகள், சேதனப் பசளை பாவனை குறித்து பலர் அறிவுரை கூறினாலும் சேதனப் பசளையும் சந்தையில் கிடைப்பதில்லை என்று மனம் வருந்தினர்.

பயிர்களை சேதப்படுத்தும் காட்டு யானை மற்றும் மிருகங்களிடமிருந்து பயிர்ச் செய்கையைப் பாதுகாப்பதற்காக இரவு முழுவதும் தூக்கமின்றி விழித்திருந்து அதிகாலையில் உயிர் அச்சுருத்தல்களுக்கு மத்தியில் நகருக்கு வருகைத் தர வேண்டியிருப்பதையும் விவசாயிகள் சுட்டிக் காட்டினர்.

Leave A Reply

Your email address will not be published.