பேராசிரியர் ரதன்ஜீவன் ஹூல் மீதான அழுத்தம் –  பொலிஸில் முறைப்பாடொன்றை செய்யவுள்ளது தேர்தல்கள் ஆணைக்குழு

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரதஜீவன் ஹூல் தொடர்பில் தொடர்ச்சியாக அரசியல் ரீதியிலான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்ற நிலையில் பொலிஸில் முறைப்பாடு ஒன்றினை செய்வதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம் எடுத்துள்ளது. பெரும்பாலும் இன்றைய தினம் முறைப்பாட்டை செய்யலாம் என  பேராசிரியர் ரதனஜீவன் ஹூல் தெரிவித்தார்.

பொதுத் தேர்தலை நடத்துவதில் தேர்தல்கள் ஆணைக்குழு தாமதங்களை முன்னெடுத்து வருவதாக அரசியல் ரீதியில் குற்றச்சாட்டுக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் தேர்தல்கள் திணைக்கள உறுப்பினர் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் தனது பதவியை பயன்படுத்தி அதிகார துஸ்பிரயோகம் செய்துள்ளதாகவும் நாட்டில் சகலருக்கும் கொவிட் -19 தனிமைப்படுத்தல் கட்டாயமாக உள்ள போதிலும் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் அவற்றை கருத்தில் கொள்ளாது தனது மகளை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைத்து வந்தார் என பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று காலையில் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் நடத்திய கலந்துரையாடலில் இந்த விடயங்களை கலந்துரையாடியுள்ளனர்.

தனக்கு எதிராக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்ற நிலையில் இது குறித்து நடவைக்கை எடுக்க வேண்டும் என பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பொலிசில் முறைப்பாடொன்றை செய்யவும் தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம் எடுத்துள்ளதாக அவர் கூறினார். தனக்கு எதிராக தொடர்ச்சியாக பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அரசியல் ரீதியில் அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றதன பின்னணியில் ஒரு சிலர் எதனை எதிர்பார்க்கின்றனர் என்பது எனக்கு தெரியும். ஆகவே ஆணைக்குழு சார்பில் இன்றைய தினம் பெரும்பாலும் பொலிசஸில் முறைப்பாடொன்றை செய்ய வாய்ப்புகள் உள்ளதாக பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.