லடாக் எல்லையில் இந்திய-சீன படைகள் குவிக்கப்பட்டு வருவதால் பதற்றம்!!!

லடாக் எல்லையில் இந்திய-சீன படைகள் குவிக்கப்பட்டு வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. லடாக் காஷ்மீர் பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கிற்கு சீனா உரிமை கோருகின்றது. அங்கு பத்தாயிரம் சீனப் படையினர் நிலைகொண்டுள்ளனர்.

இவ்வேளையில், சீன வீரர்கள் நாட்டின் இறையாண்மையை உறுதியுடன் காக்கவும், போருக்கான ஆயத்த நிலையில் இருக்கவும் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதிபர் ஷி ஜின்பிங் ராணுவத்தை தயார் நிலையில் இருக்க உத்தரவுப் பிறப்பித்ததாக சீன அரசு செய்தி நிறுவனமான சினுவா தெரிவித்துள்ளது.

சீன ராணுவம் பயிற்சியைக் கூட்ட வேண்டும், எந்த ஒரு மோசமான சூழலுக்கும் ராணுவம் தயாராக இருக்க வேண்டும் என்றும் ஜின்பிங் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.