எவரும் தாமாக விரும்பி Covid19 தொற்றைத் தழுவிக்கொள்வதில்லை – ஜே.வி.பி இன் அரசியல்பீட உறுப்பினர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ

எவரும் தாமாக விரும்பி Covid19 தொற்றைத் தழுவிக்கொள்வதில்லை. அமெரிக்காவிலும், பிரேசில், இத்தாலி, ரஷ்யா போன்ற நாடுகளிலும் நிகழும் மரணங்களைக் காணும் செவியுறும் ஒவ்வொருவரும் நோயாளியாகாமல் தப்பித்துக் கொள்வதற்கு முயற்சிப்பர் என்ற தனது கருத்தை ஜே.வி.பி இன் அரசியல்பீட உறுப்பினரும், களுத்தரை மாவட்ட வேட்பாளருமான வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தொடர்ந்து அந்தப்பதிவில்,

பல விதமான சுகாதார முறைமைகளைப் பின்பற்றிய போதிலும் சிலர் நோய்க்கு உள்ளாகின்றனர். அந் நோய்த் தொற்றாளர்களும் மனிதர்கள் தாம். அவர்கள் மனித குண்டுதாரிகள் அல்லர்.

ஏப்ரல் மாதம் நடுப் பகுதியில் இலங்கையில் கொரோனா தொற்று பரவிய காலத்தில் சுகாதார அமைச்சர் பவித்ரா வண்ணியாரச்சியும் தொற்றாளர் சிலரை ‘குண்டுதாரிகள்’ எனக் குறிப்பிட்டார். தற்போது குவைட் நாட்டில் தொழில் புரியும் நோய்த் தொற்றுக்குள்ளானவர்களை ‘மனித குண்டுகள்’ என அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே குறிப்பிட்டுள்ளார். இவை மிகவும் கவலைக்கிடமான நிலைமையாகும்.

இவர்கள் அனைவரும் இலங்கையர். இந் நாட்டின் பொருளாதாரச் சுமைக்குத் தோள் கொடுப்பவர். வெளிநாட்டிலிருந்து டொலர் அனுப்பும்போது රට විරුවන් (வெளிநாடு சென்ற வீரர்கள்) எனப் புகழ்ந்து விட்டு, நோயாளரானவுடன் ‘மனித குண்டு’ என இகழ்வது எவ்வளவு சோகமானது ?

தொற்று எவ்வளவு பாரதூரமானாலும் மனித நேயத்தைக் கொலைசெய்யாமல் நடந்துகொள்வோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Leave A Reply

Your email address will not be published.