அமெரிக்க ஏகாதிபத்தியம் வீழ்கிறது!
கலையரசன் (கலைமார்க்ஸ்)
அமெரிக்க சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சி ஆரம்பம். உழைக்கும் வர்க்க மக்களின் ஒன்றுபட்ட எழுச்சியால் நாடு பற்றி எரிகிறது. ஊரடங்கு சட்டம் போட்டும், இராணுவத்தை அனுப்பியும் மக்கள் எழுச்சியை அடக்க முடியவில்லை.
இதுவரை இலட்சக் கணக்கான மக்கள் கொரோனாவுக்கு பலியாகி விட்டார்கள். அதே நேரம், கோடீஸ்வரர்கள் நாட்டின் பொருளாதாரத்தை சுரண்டி கொள்ளையடிக்கிறார்கள். கோடிக்கணக்கான மக்கள் வேலையிழக்கிறார்கள்.
ஆனால், ஆட்சியாளர்களோ “சீனாவை பார்! வட கொரியாவை பார்!” என்று மக்களின் கவனத்தை திசைதிருப்பிக் கொண்டிருக்கிறார்கள். இவை அனைத்தும் ஒரு சாம்ராஜ்யம் வீழ்ந்து கொண்டிருப்பதற்கான அறிகுறிகள். அது நாம் எதிர்பார்த்ததை விட வேகமாக நடந்து கொண்டிருக்கிறது.