வெளிமாவட்டங்களிலிருந்து அஞ்சலி செலுத்த வந்தோர் கினிகத்தேனை பொலிசாரினால் திருப்பி அனுப்பபட்டனர்

இரா.யோகேசன் (கினிகத்தேனை நிருபர்)

நாட்டின் ஏனைய மாவட்டங்களிலிருந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் அறுமுகன் தொண்டமானுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக நுவரெலியா மாவட்டத்திற்கு வந்தோர் கினிகத்தேனை நகரத்தில் பொலிசாரினால் திருப்பி அனுப்பபட்டனர்.

நாட்டில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக நுவரெலியா மாவட்டத்திற்கு விஷேடமாக 30.5.2020 லிருந்து தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இலங்கை பொலிஸ் தலைமையகத்தாலும் ஜனாதிபதி ஊடக பிரிவாலும் அமுல்படுத்தப்பட்டிருந்தது.

இருப்பினும் எதோ ஒரு வகையில் இறுதி சடங்கில் கலந்துக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் தொழிலாளர்கள் பேரூந்துகளை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு நுவரெலியா மாவட்டத்திற்கு வந்த போதும் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டத்தினால் திருப்பி அனுப்பபட்டதினால் அஞ்சலி செலுத்துவதற்கு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

அனுமதி பத்திரமின்றி வந்ததன் காரணத்தினாலே அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக கினிகத்தேனை பொலிசார் தெரிவித்ததோடு தற்போது அமுல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு சட்டத்தை மதித்து நடக்குமாறும் பொலிசார் வேண்டுகோள் விடுத்துமிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.