கல்முனை வடக்கு உப  பிரதேச செயலத்தில் அமைக்கப்பட்டுள்ள  ஆலயம் தொடர்பாக  வழக்கினை  கல்முனை நீதவான் நீதிமன்று தள்ளுபடி செய்துள்ளது

குறித்த வழக்கு தொடர்பான விசாரணையை  விஷேடமாக பொறுப்பளிக்கப்பட்ட நீதிபதி தர்மலிங்கம் கருணாகரன் வழக்கை விசாரித்து மனுவில் உள்ள குறைபாடு காரணமாக  நேற்று செவ்வாய்க்கிழமை(2)  வழக்கை தள்ளுபடி செய்துள்ளார்.இன்று கல்முனை வடக்கு பிரதேச செயலக ஆலயம்  சார்பாக பிரதேச செயலாளர் ரி.ஜே அதிசயராஜ் மன்றில் ஆஜராகியிருந்ததுடன்  சட்டத்தரணிகளான ந.சிவரஞ்சித், மதிவதணன், ஆகியோர் ஆதரவாக  ஆஜராகியிருந்தனர்.

கடந்த 2018ம் ஆண்டு  கல்முனை மாநகர சபை முதல்வர் சார்பில் கல்முனை வடக்கு உப  பிரதேச செயலகத்தில் நீண்டகாலமாக ஊழியர்களால் வழிபட்டு வந்த இவ்வாலயம் சட்ட ரீதியற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளதாக   வழக்கு தாக்கல் செய்யப்பட்டு  கல்முனை நீதிவான்  நீதிமன்றத்தில்    வழக்கு நடைபெற்று வந்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. அத்துடன் இவ்வாலய வழக்கில் நீண்டகாலமாக பல்வேறு வழக்கு தவணைகளில்  பிரதான சட்டத்தரணி நா. சிவரஞ்சித்துடன் சட்டத்தரணிகளான ஆர்த்திகா, மதிவதணன் ஆகியோர்  ஆஜராயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.