ITN மற்றும் SLBS இன் செலவுகளை ஈடுகட்ட பொது கருவூலத்தில் 45 கோடி ருபாய் கேட்கப்பட்டுள்ளது
சுயாதீன தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆகிய இரு அரச ஊடக நிறுவனங்களின் சம்பளம், மின்சார கட்டணங்கள் மற்றும் பிற அத்தியாவசிய செலவுகளை ஈடுகட்ட 45 பில்லியன் ரூபாயை வழங்குமாறு கருவூலம் கோரியுள்ளது.
சுயாதீன தொலைக்காட்சி நிறுவனம் (ITN) தனது மூன்று மாத சம்பளத்தை செலுத்தவும், மின்சார கட்டணங்கள் மற்றும் பிற அத்தியாவசிய செலவுகளை செலுத்தவும் 18 கோடி ரூபாயைக் கேட்டுள்ளது.
அதேநேரம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (SLBS) மே மாதம் தொடக்கம் ஒக்டோபர் வரையான ஆறுமாத கால ஊழியர்களின் ஊதியம் மற்றும் மின்சார கட்டணம் உள்ளிட்ட அத்தியாவசிய செலவுகளை ஈடுகட்ட 27 கோடி ரூபாயைக் கேட்டுள்ளது.
இதற்கிடையில், இலங்கை ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தின் ஊழியர்களுக்கான மே மற்றும் ஜூன் மாதத்திற்கான சம்பளம் மற்றும் இதர செலவுகளுக்காக 20 கோடி ரூபாய் கடன் பெறுவது தொடர்பாக சமீபத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.