பொதுத் தேர்தல் தொடர்பான மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன

ஜூன் 20ம் திகதி பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பையும், பாராளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பையும் எதிர்த்து அடிப்படை உரிமைகள் சம்பந்தமாக தாக்கல் செய்யப்பட  மனுக்களை 10 நாட்களுக்கு பரிசீலித்தப் பின்பு,  இந்த மனுக்களை விசாரணையின்றி தள்ளுபடி செய்ய உச்சநீதிமன்றத்தின் ஐந்து பேர் கொண்ட குழு இன்று (02) முடிவு செய்தது.

இந்த மனுக்களுக்கு சட்டபூர்வமான அடிப்படை இல்லை என்று அந்த குழு முடிவு செய்தது.

தலைமை நீதிபதி ஜெயந்த ஜெயசூர்ய, புவனேக அலுவிஹார, சிசிர த அப்ரூ, பிரியந்த ஜெயவர்தன மற்றும் விஜித் மலல்கோட ஆகியோர் உச்சநீதிமன்றத்தின் இந்த குழுவில் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.