நுவரெலியா மாவட்த்தில் 8 ஆசனங்களுக்கு 275 பேர் போட்டி
இரா.யோகேசன் (கினிகத்தேனை நிருபர்)
இவ்வருடம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் பொதுதேர்தலில் நுவரெலியா
மாவட்டத்திலிருந்து மாத்திரம் 275 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்றத்திற்கு 225 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு இவ்வருடம் நடைபெற
எதிர்பார்க்கப்படும் தேர்தலுக்காக நுவரெலியா மாவட்டத்தில் 8 ஆசனங்கள்
ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்காக 12 அரசியல் கட்சிகளிலிருந்து 132 பேரும் 13 சுயேட்சை
குழுக்களிலிருந்து 143 பேரும் களத்தில் தமது தேர்தலை பிரசாரங்களை தற்போது ஆரம்பிக்க
எதிர்பார்த்துள்ளனர்.
இறுதியாக 2015ல் நடைபெற்ற பொதுதேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி 5 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 3 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.