வெளிநாட்டிலிருக்கும் இலங்கையரை அழைத்து வாருங்கள்… நாங்கள் 20,000 பேரை பொறுப்பேற்கிறோம் என்கிறது ஜே.வி.பி
வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வர எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 40, 000 அளவிலான இலங்கையரில் 20,000 பேரை தாம் பொறுப்பேற்றுக்கொள்வதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். பெலவத்தையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வர எதிர்பார்த்து காத்திருக்கும் இலங்கையரை அரசாங்கம் அழைத்து வர வேண்டும் என்றும், அவர்களில் 20,000 பேரை தாம் பொறுப்பேற்று தனிமைப்படுத்தல் சட்டத்திட்டங்களுக்கு அமைய பராமரிப்பதாகவும், அவர்களுக்கு தேவையான உணவு, மருத்துவம் மற்றும் பிற அத்தியாவசியத் தேவைகளை தாம் நிறைவேற்றுவதாகும், மிகுதி இலங்கையரை அரசாங்கம் பொறுப்பேற்று பராமரிக்க வேண்டும் எனவும் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.