அமைதியான போராட்டங்கள் மீதான தாக்குதலைக் நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம் – தேசிய மக்கள் சக்தி
நேற்று (09) காலை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே முன்னணி சோசலிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய தாக்குதலையும், பங்கேற்றவர்களை கைது செய்ததையும் வன்மையாகக் கண்டிப்பதாக தேசிய மக்கள் சக்தி நேற்றைய தினம் அறிவித்திருந்தது.
மேலும், “கோவிட் – 19 வைரஸ் தாக்குதலைக் காரணம் காட்டி மக்களின் ஜனநாயக உரிமைகளையும், நியாயமான, அமைதியான போராட்டங்களை நடத்துவதற்கான மக்களின் உரிமையையும் குறைத்து மதிப்பிடுவதற்கு அரசாங்கத்தை அனுமதிக்கக்கூடாது. தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, மேற்கொண்ட இந்த பொலிஸ் தாக்குதலும், கைது நடவடிக்கையும் அரசாங்கத்தின் அடக்குமுறை நடத்தையை அம்பலப்படுத்துகிறது. இலங்கை ஆட்சியாளர்களின் நடவடிக்கையானது, ஒருபுறம் அவரகள் அடக்குமுறை ஆட்சிக்கான தயார்நிலையையும் மறுபுறம் அமெரிக்க சார்பு செல்வாக்கையும் நிரூபிக்கிறது. மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க அனைத்து மக்களையும் நாங்கள் அழைக்கிறோம்.” என்றும் குறிப்பிடப்பட்டது.