ஜனாதிபதிக்கு சவால்விட்ட முச்சக்கரவண்டிச் சங்கத் தலைவர் படுகொலை

கொரோனா தொற்று காரணமாக வாகன லீசிங் நிவாரணத்தை குறித்த நிறுவனத்ததோடு கலந்துரையாடி பெற்றுத்தருவதாக அரசாங்கம் வாக்குறுதி வழங்கியதாக ஊடங்ககளில் செய்தி வெளியிடப்பட்ட போதிலும், அது சம்பந்தமாக எந்தவித நடவடிக்கையும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப் பட்டிருக்கவில்லை எனவும், நாங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லத்திற்கு முன்பாகக் கூடி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்றும் கூறிய இலங்கை சுயதொழில் ஊழியர்களின் தேசிய முச்சக்கர வண்டிச் சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன நேற்றைய தினம் (11) நுகேகொட, மிரிஹான பிரதேச நெடுஞ்சாலை அருகில் கடுமையாக தாக்கப்பட்டு, கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகாமை பிரதேசத்தில் உள்ள வாகன லீசிங் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட வாகன ஆக்கிரமிப்பு பற்றி கேள்விகேட்கும் போதே அவர் ஜனாதிபதிக்கு சவால் விட்டிருந்தார். இதுபற்றி அந்த லீசிங் நிறுவனத்தின் தலைவரிடம் சுனில் ஜயவர்தன வினவுகையில், எங்களுக்கு அரசாங்கத்தின் அறிவுறுத்தல் மீது அக்கைறை இல்லை என லீசிங் நிறுவனத்தின் தலைவர் நேரடியாகவே கூறியிருந்தார். இதன் பின்னர் குறிப்பிட்ட சிலர் சேர்ந்து நெடுஞ்சாலை அருகில் சுனில் ஜெயவர்தனவை படுகொலை செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.