மக்களின் மனமாற்றமே வடமராட்சியின் எதிர்காலத்தை வளமாக்கும் – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன்!

தமிழ் மக்களுக்கான உரிமைப் போராட்டம் மற்றும் அதனுடன் கூடிய ஏதுநிலைகளால் அதிகம் ஈர்க்கப்பட்ட பிரதேசமாக இந்த வடமராட்சி பிரதேசம் காணப்படுகின்றது. ஆனாலும் அந்த தாக்கங்களிலிருந்து இன்று எமது மக்கள் விடுபட்டு தமது எதிர்காலம் தொடர்பிலான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்கு முயற்சிக்கின்றனர்.

மக்களின் இந்த முயற்சிக்கு தேசியம் என்ற போர்வைக்குள் இருந்து அரசியல் செய்பவர்களால் ஒருபோதும் தீர்வுகளை கண்டுதரமுடியாது. மக்களின் எதிர்காலம் நோக்கிய பயணத்துக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரது வழிமுறையே சாத்தியமானது என இன்று இதர தமிழ் அரசியல் தரப்பினரும் ஏற்றுள்ளனர்.

அந்தவகையில் எமது வடமராட்சி மக்களிடையே மனமாற்றம் ஒன்றே  அவசியமாகின்றது. அந்த மாற்றமே அவர்களது எதிர்காலத்தை வென்றெடுக்கும் சக்திகொண்டதாக அமையும். அதற்காக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கரங்களுக்கு என ஈழ மக்கள ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளரம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாராட்சி, தம்பசிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வட்டார ரீதியிலான செயற்பாட்டாளர்களுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடத்திய சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.