ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இனி இனவாதம் இல்லை – தெரிவிக்கிறார் அர்ஜுன ரணதுங்க

இனிமேல் எதிர்கால வேலைத்திட்டங்களில் ஐக்கிய தேசியக் காட்ச்சிக்குள் இனவாதம் இருக்காது என அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். கம்பஹா, எந்தேரமுல்ல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஐ.தே.க இரண்டாக பிளவுப்பட்டுள்ளது. ஒன்று சேர்க்க முடியாமல் போனதால் தனித்தனியாக தேர்தலில் போட்டியிட வேண்டியுள்ளது. இனிமேல் ஐ.தே.க விற்குள் இனவாதம் இல்லை. ஒருபோதும் விளையாட்டுக்குள்ளும் இனவாதம் இருந்ததில்லை என்றும் அவர் கூறினார்.

இதுபற்றி அரசியல் விமர்சகர்கள் அர்ஜுன ரணதுங்கவின் கூற்றில் இருந்து இதுவரையில் ஐக்கிய தேசியக் கட்சி இனவாத போக்கில் செயற்பட்டது ஒப்புக்கொள்ளப்படுகிறது என்கின்றனர். 1983 கறுப்பு ஜுலை, திகன கலவரம் போன்றவற்றைக் காரணம் காட்டுகின்றனர். ஐக்கிய தேசியக் கட்சியிடம் ஒருபோது இனவாதத்தை ஒழிப்பதற்கான திட்டங்கள் இருந்ததில்லை. இனியும் சாத்தியமில்லை என்று கருத்து தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.