எதிர்தரப்பு வெள்ளையரை காப்பாற்றிய கருப்பு இளைஞர்! பிரித்தானியாவில் நடந்த சம்பவம்!!

Black Lives Matter போராட்டக்காரர்களுக்கும் அதற்கு எதிரான தீவிர வலதுசாரி வெள்ளையர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் வலதுசாரி வெள்ளையர் ஒருவர் படுகாயமடைந்தார்.

வோட்டர்லு புகையிரத நிலையத்திற்கு அருகில் ஏற்பட இந்த கைகலப்பில் குறிப்பிட்ட வெள்ளையர் கடுமையாக தாக்கப்பட்டதை அடுத்து, அங்கிருந்த கருப்பு போராட்டக்காரர் வெள்ளையரைக் காப்பாற்றி தன் தோளில் சுமந்துச் சென்று வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

சனிக்கிழமை மோதல் விவகாரத்தில் 20 பேர் காயமடைந்தனர். இதில் தமக்கு எதிராக செயற்பட்ட வெள்ளையரை கருப்பு இனத்தவர் தோளில் சுமந்து சென்ற நிகழ்வு இன்று எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளதோடு, மனித்தத்தையும் போதித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.