நிதி நிறுவனங்களின் சரிவின் மர்ம ரகசியம்!

ராஜபக்ஷ ஆட்சியின் ஆரம்ப நாட்களில், அதாவது உலக பொருளாதார நெருக்கடி தொடங்குவதற்கு முன்பு, இலங்கையின் நிதி நிறுவனங்கள் பெரும் சரிவை சந்திக்கத் தொடங்கியிருந்ததற்கான காரணங்கள் தெரியவந்துள்ளன.

1988 முதல் 2007 வரையிலான 19 ஆண்டுகளில் ஒன்பது நிதி நிறுவனங்கள் வீழ்ச்சியடைந்திருந்தன. ஆனால் அதற்கடுத்த இரண்டு ஆண்டுகளில் செயலிழந்த நிதி நிறுவனங்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. முக்கியமாக இங்கு குறிப்பிடவேண்டிய விடயம்  என்னவென்றால், நாட்டில் பெரும் சர்ச்சைக்குள்ளாகிய செலின்கோ நிதி நிறுவனங்களின் சரிவு ஆகும். செலின்கோ கோல்டன் கீ கிரெடிட் கார்டு நிறுவனங்களும், செலின்கோ ஸ்ரீராமும் 2008 ஆம் ஆண்டு சரிந்தன.

நிதி நிறுவனங்களின் சரிவு மிகக் கடுமையாகியதோடு, பணத்தை வைப்பிலிட்டோர் தங்களது பணத்தை மீள கேட்டபோது இந்நிலைமை மிக மோசமாகியது. இந்த நிலமையைக் கட்டுப்பாட்டில் கொண்டுவர 2009 ஆம் ஆண்டில், அமைச்சரவை நான்கு உறுப்பினர்களைக் கொண்ட ஒரு தொழில்முறை குழுவை நியமித்தது.

இந்தப் பின்னணியில், நிதி நிறுவனங்கள் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால், காப்பீட்டாளர்கள் காப்பீட்டு இழப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்தினர். அதன்படி உயர்த்தபட்சம் ரூபா இரண்டு இலட்சத்தை மீள அளித்தல் என்று திட்டம் கொண்டு வரப்பட்டதோடு, தற்போது அது ஆறு இலட்சம் ரூபா வரை அதிகரித்துள்ளது.

த பினென்ஸ் நிறுவனம் 2005 ல் நெருக்கடியில் விழுந்த பின்னர், இது இலங்கை மத்திய வங்கியின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதோடு அதற்கடுத்த மே 22 அன்று மூடப்பட்டது.

இந்த காலகட்டத்தில் (2006-2015), இலங்கை மத்திய வங்கியின் பதிவு செய்யப்பட்ட நிதி நிறுவனங்களும் பதிவு செய்யப்படாத பல சட்டவிரோத நிதி நிறுவனங்களும் வீழ்ச்சிக்கண்டன.

செலின்கோ குழும நிறுவனங்களின் தலைவரான லலித் கொத்தலாவல ஒரு முறை பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அயகம விளையாட்டு அரங்கைக் கட்ட ராஜபக்சர்களுக்கு 100 மில்லியன் ரூபாயை தாம் செலுத்தியதாக  தெரிவிதித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

 

Leave A Reply

Your email address will not be published.