இளைஞனைக் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஹிருனிகாவை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

இளைஞனைக் கடத்தி சிறையில் அடைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திராவை ஜூலை 10 ம் திகதி ஆஜராகுமாறு கொழும்பு உயர் நீதிமன்றத்தின் நீதிபதி சம்பா ஜானகி ராஜரத்ன இன்று (17) உத்தரவிட்டுள்ளார்.

2015 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் திகதியன்று, தெமட்டகொடவில் உள்ள கடையொன்றில் பணிபுரிந்து வந்த அமில பிரியங்கர என்ற இளைஞரைக் கடத்தி சிறையில் அடைத்ததற்காக ஹிருனிகா பிரேமச்சந்திர வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ​​ஹிருணிகா பிரேமச்சந்திராவோ அல்லது அவரது வழக்கறிஞர்களோ நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

Leave A Reply

Your email address will not be published.