இ.தொ.கா வின் புதிய பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் – பொதுத் தேர்தலுக்கு பிறகே தலைவர் தெரிவு செய்யப்படுவார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் ஆறுமுகம் தொண்டமானின் மரணத்தைத் தொடர்ந்து கட்சியின் தலைமையிடம் வெற்றிடமாக இருப்பதோடு, அந்த வெற்றிடத்தை பொதுத் தேர்தலுக்குப் பிறகு பூர்த்தி செய்வதாக இ.தொ.கா முடிவு செய்துள்ளது. அதோடு இன்றைய தினம் (17.06.2020) கட்சியின் புதிய பொதுச் செயலாளராக ஜீவன் தொண்டைமான் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே பொதுச் செயலாளராகவிருந்த அனுஷியா சிவராஜாவிற்கு உப தலைவர் பதவி வழங்கப்பட்டதோடு, கட்சியின் ஏகமனதாக ஆதரவோடு ஜீவன் தொண்டமான் பொதுச் செயலாளர் ஆக்கப்பட்டுள்ளார்.