நடுநடுங்கிப் போயுள்ளனர் மத்திய வங்கியின் அதிகாரிகள்
ஏழு மாதத்திற்குப் பிறகு உளவுத்துறையின் மூலம் மத்திய வங்கி தூங்கிக்கொண்டிருப்பதை ஜனாதிபதி அறிந்துக்கொண்டதை அடுத்து, மத்திய வங்கியின் அதிகாரிகளை ஜனாதிபதி கடுமையாக சாடியுள்ளதனால், மத்திய வங்கி அதிகாரிகள் நடுங்கிப்போயுள்ளதோடு, ஜனாதிபதியின் இச்செயலைக் கண்டு மகிழ்ச்சியில் சிலர் இரவு உணவும் உண்ணவில்லையென்று அறிய முடிகிறது.
ஜனாதிபதியின் கடுமையான வார்த்தைக்குப் பயந்து கொண்டு அதிகாரிகள் வேலை செய்துள்ளனர். மத்திய வங்கியின் கட்டிடத்தின் மின்குமிழ்கள் நேற்று இரவு முதல் அதிகாலை வரை ஒளிர்ந்ததில் இருந்து இது உறுதியாகிறது.
அதிகாரிகள் நித்திரை கொள்ளாது வகுத்த திட்டங்களின் படி, மசகு ஏனெனின் விலை சில தினங்களில் 50 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.
சலுகையாக வழங்கப்பட்ட 5000 ரூபாவை 10,000 ரூபா வரை உயர்த்தி கடந்த மாத கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது.
இந்த முக்கியமான கட்டத்தில், மத்திய வங்கி அதிகாரிகளால் தான் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதனால், இந்த பொருட்களின் விலைகள் குறைய வாய்ப்புள்ளது.
சமீப காலங்களில் கடுமையான நட்டத்தை சந்தித்த விவசாயிகளை ஊக்குவிக்க சிறப்பு இழப்பீடு வழங்கவும் வாய்ப்புள்ளது.
நாடு பூட்டப்பட்டிருந்த காலத்திற்காக நிதி நிறுவனங்களின் நிவாரணமாக, கடன்கள் மற்றும் குத்தகைகளுக்கு பதில், வட்டியைக் குறைத்து, மறு அறிவித்தல் வரை, சலுகை வட்டி விகிதத்தை 4% ஆக வசூலிக்கவும் இடமுள்ளது.
தொழில்முனைவோருக்கு 4% வட்டிக்கு கடன் வழங்கவும் திட்டமிட்டுள்ளது.
நாட்டில் பணத்தை திருட உதவிய அதிகாரிகளை அம்பலப்படுத்தி, இத்தகைய சலுகைகளை வழங்கும் ஜனாதிபதியை அனைவரும் பாராட்ட வேண்டும்.