பிராந்திய புலனாய்வு போலீஸ் அதிகாரி தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்துள்ளார்! கல்முனை போலீசில் நடந்தச் சம்பவம்!!
கல்முனை போலீஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்ட பிராந்திய புலனாய்வு சேவை போலீஸ் அதிகாரியொருவர் போலீஸ் நிலையத்தில் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இருந்துள்ளதாக போலீஸ் ஊடகப் பிரிவு நேற்று (19) அறிவித்திருந்தது.
அந்த போலீஸ் நிலையத்தில் புலனாய்வு அலுவலகத்தினுள்ளேயே மாலை 5.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது என்றும் போலீஸ் ஊடகப் பிரிவு கூறியது.
இவ்வாறு உயிரிழந்துள்ள 21 வயதுதுடைய புலனாய்வு போலீஸ் அதிகாரி யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்டவர் என்றும், அவரது மரணம் குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் போலீஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.