அணி இல்லாத ஒருவர் எவ்வாறு போட்டியைகாட்டிக் கொடுக்க முடியும்? – மஹேல கேள்வி!

அணியில் இல்லாத ஒருவர் போட்டியைக் காட்டிக்கொடுத்து எவ்வாறு? 2011 உலக கிண்ண கிரிக்கட் சுற்றுப்போட்டியை பணத்திற்கு தாரைவார்த்ததாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே எழுப்பிய கேள்விக்கு மறுபடியும் பதில் சொல்லும் விதமாக மஹேல ஜயவர்தன தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

இறுதி போட்டியில் விளையாடிய 11 பேரைத் தவிர்த்து வேறொருவர் எவ்வாறு போட்டியைக் கொடுத்தார் என்பது பற்றி எனக்குத் தெரியாது என்று மஹேல ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

“அவ்வாறு 2011 உலக கிண்ண போட்டி பணத்திற்கு தாரைவார்க்கப்பட்டது என்றால் அது இயற்கையான பெரிய கொடுக்கல் வாங்கலாகத்தான் இருக்க முடியும். ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு நாம் புத்திசாலிகளாக இருப்பதாக நம்புகிறோம்.” என்று குறிப்பிட்டிருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.