சஜித் ஆட்சிக்கு வந்ததும் ரூபா 1500 நிச்சயம் – தோட்டத் தொழிலாளர்களுக்காக கட்சி விட்டு கட்சித் தனைய வடிவேல் சுரேஷ் கூறுகிறார்
தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை 1000 ஆக உயர்த்தாது முதலாளிமார் சம்மேளனம் நீட்டிய கூட்டு உடன்படிக்கையில் கையொப்பத்தை இட்டுவிட்டு, சஜித் ஆட்சிக்கு வந்தால் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1500 ரூபாய் சம்பளத்தை நிச்சயமாக வழங்குவதாக வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
“பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கம் அன்று நடவடிக்கை எடுத்திருந்தது. அமைச்சரவையும் அனுமதி வழங்கியிருந்தது. ஆனால், சாமி கொடுத்தாலும் பூசாரி தடுப்பதுபோல நவீன் திஸாநாயக்கவே அதனை தடுத்தார்.” என்று கூறிய வடிவேல் சுரேஷ் அவர்கள், அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் தான் சஜித் பிரேமதாச இருந்தார் என்பதையும் தற்போது மறந்திருக்கக் கூடும்.
மஹிந்த ராஜபக்ஷவினால் நல்லாட்சி அரசாங்கம் கவிழ்க்கப்பட்டபோது, அச்சமயம் மஹிந்தவின் பக்கம் தாவிய வடிவேல் சுரேஷ், தான் தோட்டத் தொழிலாளர்களுக்காகவே அவர்களுடன் இணைந்ததாகக் கூறினார். மறுபடி அவர் அந்த பக்கத்தில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கம் தாவிய போதும் தான் தோட்டத் தொழிலாளர்களுக்காகவே செயற்படுபவன் என்றார்.
2020 ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த சஜித் பிரேமதாச ஆட்சிக்கு வந்ததும் தோட்டத் தொழிலாளர்களின் நாட்சம்பளத்தை 1500 ரூபாவாக உயர்த்தப்போவதாக வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.