பெரிய நீலாவணையில் பிடிக்கப்பட்டது சாதாரண மீன் இல்லை!
மினி முத்து மோறா என்று சிங்களவர்களாலும் புள்ளி சுறா என்று தமிழ் மீனவர்களாலும் அழைக்கப்படும் இவ்வகைச் சுறாக்கள் திமிங்கில சுறா ( whale shark) என அறியப்படும் ஒரு வகை வெப்ப வலயத்துக்குரிய மீனினமாகும்.
உலகின் மிகப் பெரிய விலங்கு என்றால் நாம் நீலத் திமிலங்கலத்தையே சுட்டுவோம். மமேலியா தவிர்த்து மீனினங்களுக்குள் மிகப்பெரியதும் கசியிழைய மீனின வகையைச் ( condrichthys ) சார்ந்ததுமான Rhincodon typus எனும் விஞ்ஞானப் பெயரைக் கொண்ட இம் மீன், மீன்கள் ராஜ்ஜியத்திலே மிகப் பெரியதாகும்.
சுமார் 70 வயது வரை வாழக்கூடியதும் , 62 அடி நீளம் வரை வளரக் கூடியதுமாகும். மிகப்பெரிய மீன்கள் சுமார் 21 தொன் நிறை வரை காணப்படுகின்றன. இவ்வகை மீன்கள் மனிதர்களுக்கு எதுவித பாதிப்புக்களையும் ஏற்படுத்துவதில்லை.
இதற்கு முன்னர் 2014 காலப்பகுதியிலும் இதே வகை திமிங்கில சுறாக்கள் அம்பாரை மீனவர்களாலேயே பிடிக்கப்பட்டுள்ளது. இன்றும் அவ்வாறே.
அச்சுறுத்தலுக்குள்ளாகும் உயிரினங்கள் பட்டியலில் உள்ள திமிங்கில சுறா மீனினை மீண்டும் கடலின் உறவிலேயே சங்கமிக்க வைத்து உயிர்ப் பல்வகைமையின் சங்கிலியை உடைக்காமல் பாதுகாத்த பெரிய நீலாவணை மீனவர்கள் பாராட்டிற்குரியவர்கள்.
தகவல் – இந்திரா
புகைப்படம் – சிறிதரன் தேவராசா