இ.தொ.கா தலைமைகளுக்கும் மக்களுக்குமிடையில் தொடர்பு இருந்ததில்லையென ஏற்றுக்கொண்டார் ஜீவன் தொண்டமான்!
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைமைத்துவத்திற்கு மக்களுக்கும் இடையில் தொடர்பு இருந்ததில்லை என்றும், இது இதுவரை இலங்கை தொழிலாளர் இழைத்த தவறு என்றும் கட்சியின் பொது செயலாளர் ஜீவன் தொண்டமான் ஏற்றுக்கொண்டுள்ளார்.
நாவலபிட்டியவில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போதே மக்களிடத்தில் இ.தொ.கா இழைத்த தவறை ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதுவரையில் கட்சியின் தலைமைத்துவத்தில் இருந்தவர்கள் தொண்டைமான்களே ஆவர். இவர்களே தம்மை மலையக மக்களின் தலைமைகள் என்று கூறிக்கொன்றனர். இன்று ஜீவன் தொண்டமான் இவ்வாறு கூறிய கருத்தை தனது ஒப்புதல் வாக்குமூலமாகத்தான் கருத வேண்டியுள்ளது. இதன்மூல தெரியவருவது என்ன? இ.தொ.கா மலையக மக்களுக்கான கட்சி இல்லையென்றா??